மேலும் அறிய

Twitter New CEO: சொன்னபடி விலகிய எலான் மஸ்க்... ட்விட்டரின் புதிய CEO -ஆக லிண்டா யாக்காரினோ நியமனம்..!

ட்விட்டர் நிறுவனத்தின்  புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோ நியமிக்கப்பட்டுள்ளதாக, அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். 

ட்விட்டர் நிறுவனத்தின்  புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோ நியமிக்கப்பட்டுள்ளதாக, அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். 

அட்ராசிட்டி பண்ணிய எலான் மஸ்க் 

நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பங்கள் உருவாகும் இந்த சமூகத்தில் உலகம் முழுவதும் நடைபெறும் தகவல்களை உள்ளங்கையில் பெற சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு  வகிக்கின்றது. இத்தகைய வலைத்தளங்கள்  பிற மக்களுடன் உரையாடும் தகவல் தொடர்பு சாதனமாகவும் திகழ்கிறது. அந்த வகையில் ட்விட்டரின் பங்கு மிகப்பெரியதாக உள்ளது. 

நீண்ட இழுத்தடிப்புக்கு பின் கடந்தாண்டு அக்டோபர் மாதம் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்   ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார்.  சுமார் 44 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.3.65 லட்சம் கோடி) அந்நிறுவனம் கைமாறியதில் இருந்தே தினம் தினம்  தலைப்புச் செய்தியில் இடம் பெறும் வண்ணம் சிஇஓ ஆக இருந்த எலன் மஸ்க் செயல்பட்டு வந்தார். 

அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு அளிக்கப்படும் ப்ளூ டிக் பெற கட்டணம், 3 வகையான அதிகாரப்பூர்வ கணக்கை குறிக்கும் குறியீடுகள், ஊழியர்கள் பணிநீக்கம் என தொடர் நடவடிக்கையில் இறங்கிய எலான் மஸ்க் கடந்த மாதம் ட்விட்டரின் நீல குருவி லோகோவை சில தினங்களுக்கு மாற்றினார். அதற்கு பதிலாக  ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. பின் மீண்டும் நீல குருவி வந்தது. 

தொடர்ந்து கட்டணம் செலுத்தாத  பயனாளர்களின் ப்ளூ டிக் குறியீடு பறிக்கப்பட்டது. பின்னர் 10 லட்சம் ஃபாலோயர்களை கொண்டவர்களுக்கு இலவசமாக அளிக்கப்பட்டது.

சொன்னபடி நியமிக்கப்பட்ட புதிய சிஇஓ

இப்படியான நிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் எலான் மஸ்க் ட்விட்டரில் "நான் ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமா?" என கேள்வியெழுப்பி வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியிருந்தார். இதில் பெரும்பான்மையானவர்கள் அவர் விலக வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர். இதனை ஏற்றுக் கொண்டு அதற்குத் தான் கட்டுப்படுவதாகவும் எலான் உறுதியளித்திருந்தார்.

மேலும், இந்த வேலைக்கு முட்டாள்தனத்துடன் ஒருவர் கிடைத்த பிறகு விலகுவேன் எனவும் எலான் மஸ்க் கூறியிருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் அவர் ட்வீட் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், “ட்விட்டருக்குப் புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், ஆறு வாரங்களில் அவர் தன் பணியைத் தொடங்குவார்” எனவும் தெரிவித்திருந்தார்.

புதிய சிஇஓ ஆக லிண்டா யாக்காரினோ

அதன்படி ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓ ஆக லிண்டா யாக்காரினோ நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊடகத்துறையில் குறிப்பிடத்தக்க  நபராக வலம் வரும் லிண்டா யாக்காரினோ, பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.  பின்னர் Turner Broadcasting System  என்ற ஊடக நிறுவனத்தில் தனது வேலையை தொடங்கிய அவர், மார்க்கெடிங் துறையில் பதவி வகித்தார்.

இதனைத் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு NBCUniversal ஊடக நிறுவனத்தில் சேர்ந்த லிண்டா யாக்காரினோ, 2007 ஆம் ஆண்டு பொழுதுபோக்கு விளம்பர விற்பனையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.  2011 ஆம் ஆண்டு NBCUniversal இல் உலகளாவிய விளம்பரம் மற்றும் கூட்டாண்மைகளின் சேர்மனாக பதவியேற்ற லிண்டா யாக்காரினோ, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் விளையாட்டு, உடற்தகுதி மற்றும் ஊட்டச்சத்து கவுன்சிலில் இரண்டு ஆண்டுகள் பதவி வகித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
"கலங்கரை விளக்கம்.. அரிதிலும் அரிதான தலைவர்" மன்மோகன் சிங்குக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Embed widget