இந்தியாவில் ரியல் எஸ்டேட் ப்ராஜெக்ட்.. அமெரிக்க அதிபரின் ஸ்கெட்ச்.. புனேவில் வருகிறது ட்ரம்ப் உலக மையம்
மகாராஷ்டிரா மாநிலமான புனேவில் ரியல் எஸ்டேட் நிறுவனமான குந்தன் ஸ்பேசஸுடன் இணைந்து ட்ரம்ப் உலக மையம் கட்டப்பட உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவில் தனது பெயரிலேயே ரியல் எஸ்டேட் பிசினஸ் தொடங்க உள்ளார். ட்ரம்பின் ரியல் எஸ்டேட் கூட்டு நிறுவனமான டிரிபெகா டெவலப்பர்ஸ், ட்ரம்ப் பெயரில் ரியல் எஸ்டேட் ப்ராஜெக்டை தொடங்கி உள்ளது. 289 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது ட்ரம்பின் ரியல் எஸ்டேட் நிறுவனம்.
அமெரிக்கா இல்ல, இந்தியாதான் குறி:
அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் ட்ரம்ப், அடிப்படையில் ஒரு தொழிலதிபர். தனது தந்தையின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை கையில் எடுத்து அதை பெரிய அளவுக்கு கொண்டு சென்றவர் ட்ரம்ப். தொடக்கத்தில் நியூயார்க் நகரில் மட்டும் செய்து வந்த ரியல் எஸ்டேட் பிசினஸை பின்னர் அமெரிக்க முழுவதும் விரிவுப்படுத்திய ட்ரம்ப், தற்போது தனது கவனத்தை இந்தியாவில் திருப்பியுள்ளார்.
அமெரிக்காவை தாண்டி ஒரு நாட்டில் ட்ரம்ப் பெரிய அளவில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறார் என்றால் அது இந்தியாவில்தான். கடந்த 10 ஆண்டுகளாக, மற்ற உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து, உரிம ஒப்பந்தங்களின் கீழ் நான்கு இந்திய நகரங்களில் குடியிருப்பு திட்டங்களை உருவாக்க டிரிபெகா உதவி புரிந்துள்ளது.
ட்ரம்ப் உலக மையம்:
இந்த நிலையில், அடுத்த கட்டத்திற்கு செல்ல உள்ளார் ட்ரம்ப். மகாராஷ்டிரா மாநிலமான புனேவில் ரியல் எஸ்டேட் நிறுவனமான குந்தன் ஸ்பேசஸுடன் இணைந்து ட்ரம்ப் உலக மையம் கட்டப்பட உள்ளது. இங்கு, கடந்த பத்தாண்டுகளில் பல பெரிய உலகளாவிய மற்றும் உள்ளூர் ஐடி நிறுவனங்கள் அலுவலகங்களை அமைத்துள்ளன.
இதுகுறித்து டிரிபெகா டெவலப்பர்ஸ் நிறுவனர் கல்பேஷ் மேத்தா கூறுகையில், "இந்த திட்டம் சுமார் நான்கு ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 4 முதல் 6 வாரங்களில் வடக்கு மற்றும் தென்னிந்தியா முழுவதும் டிரம்ப் பிராண்டட் சொகுசு குடியிருப்பு திட்டங்களையும் நிறுவனம் தொடங்கவுள்ளது. இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டத்தின் மூலமும் வரவுள்ள குடியிருப்பு திட்டங்களின் மூலமாகவும் 1.15 பில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டப்பட உள்ளது" என்றார்.
இதையும் படிக்க: Sunita Williams: அன்று அவமானம்? இன்று இந்தியாவின் மகளா? கொலை, மோடிக்கும் - சுனிதா வில்லியம்ஸ் குடும்பத்திற்குமான பகை





















