Trump USA: ரெண்டே வாரம் தான் - ஈரான் Vs இஸ்ரேல் மோதல், இறங்கி அடிப்போமா? ட்ரம்ப் முடிவு, களத்தில் சீனா
Iran Israel Conflict: ஈரான் இஸ்ரேல் மோதலில் தலையிடுவது குறித்து இரண்டு வாரங்களில் முடிவு செய்யப்படும் என, அமெரிக்க அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.

Iran Israel Conflict: ஈரான் இஸ்ரேல் மோதல் குறித்து அதிபர் ட்ரம்ப் உரிய முடிவெடுப்பார் என, வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
வெள்ளை மாளிகை அறிவிப்பு:
ஈரான் மீதான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஒரு முடிவை அறிவிப்பார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ட்ரம்பின் செய்தியை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள அறிக்கையில், "எதிர்காலத்தில் ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடக்கலாம் அல்லது நடக்காமல் போகலாம் என்ற கணிசமான வாய்ப்பு உள்ளது என்ற உண்மையின் அடிப்படையில், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பிரச்னையில் தலையிடலாமா வேண்டாமா என்பதை நான் முடிவெடுப்பேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு வந்த ஈரான்?
வெள்ளை மாளிகையை மேற்கோள் காட்டி, ”ஈரான் ஓரிரு வாரங்களில் அணுகுண்டை தயாரிக்கும் திறன் கொண்டதாக மாறும்” என AFP செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. "ஈரான் ஓரிரு வாரங்களில் அணுகுண்டை தயாரிக்க முடியும்" என்று வெள்ளை மாளிகை செய்தி நிறுவனமான AFP மேற்கோளிட்டுள்ளது. புதன்கிழமை, இஸ்ரேலின் தாக்குதல்களில் இணைவதற்கான விருப்பத்தை பரிசீலித்து வருவதாக குறுப்பிட்ட ட்ரம்ப், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதிக்க ஈரான் அமெரிக்காவை அணுகியதாகவும் கூறினார். "ஈரானுக்கு நிறைய சிக்கல்கள் உள்ளன, அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல முடியும்" என்றும் விளக்கினார்.
சீனா, ரஷ்ய தலைவர்கள் கண்டனம்:
ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் aஅகியோர் கடும் கண்டனங்களை பதிவு செய்ததோடு, உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக இஸ்ரேல், பொதுமக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். வெளியாகியுள்ள தகவல்கலின்படி ஜின்பிங், புதினுடன் ஒரு தொலைபேசி அழைப்பில் ஈரான்-ஈரான் மோதல் குறித்து விவாதித்துள்ளார். மேற்கு ஆசியாவில் மோதலைத் தீர்ப்பதில் போர் நிறுத்தம் ஒரு அவசர முன்னுரிமை என்றும், சர்வதேச மோதல்களைத் தீர்க்க பலத்தைப் பயன்படுத்துவது சரியான வழி அல்ல என்றும் கூறியுள்ளார்.
சீனாவின் முதல் கருத்து:
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்ததற்கும், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை குறிவைக்கும் இஸ்ரேலின் அச்சுறுத்தலுக்கும் மத்தியில், பிராந்தியத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மோதல் குறித்து ஜி ஜின்பிங் கூறிய முதல் கருத்து இதுவாகும். கிரெம்ளின் வெளியுறவுக் கொள்கை உதவியாளர் யூரி உஷாகோவை மேற்கோள் காட்டி அறிக்கையின்படி, "அதிபர் புதின் மற்றும் ஜின் பிங் இருவரும் தங்கள் ஒரு மணி நேர தொலைபேசி அழைப்பில் ஈரான் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ள தங்கள் தொடர்புடைய நிறுவனங்களுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க ஒப்புக்கொண்டனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















