மேலும் அறிய

Trump Answers Khamenei: “ஈரான் ஒப்பந்தம் செய்யும்னு நம்புறேன், அப்படி இல்லைன்னா...“; அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது என்ன.?

அமெரிக்கா உடன் பிரச்னை நிலவிவரும் சூழலில், ஈரான் விரைவில் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் என நம்புவதாகவும், அப்படி செய்யாவிட்டால், காமேனி சொன்னது சரியா என்பது தெளிவாகிவிடும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கைக்கு பதிலடி கொடுத்து ஈரான் உச்ச தலைவர் காமேனி, அமெரிக்கா தாக்கினால் பிராந்திய அளவில் போர் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், ஈரான் விரைவில் ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் கூறியுள்ளது என்ன.?

புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் விவகாரத்தில் ஒரு ராஜதந்திர முடிவை விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஆனால், எந்த ஒரு ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால், அமெரிக்க அந்த பகுதியில் நிலைநிறுத்தியுள்ள ராணுவத்தை பயன்படுத்த தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், உலகின் மிகப்பெரிய, மிகவும் சக்திவாய்ந்த போர்க் கப்பல்கள் தங்களிடம் உள்ளதாக கூறியுள்ள ட்ரம்ப், மிகவும் நெருக்கமா, அதாவது இன்னும் சில நாட்களில் ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்வோம் என்று நம்புவதாகவும், அப்படி ஒப்பந்தம் செய்யவில்லை என்றால், காமேனி கூறியது சரியா இல்லையா என்பது தெரிந்துவிடும், அதாவது பிராந்திய போர் ஏற்படும் என்று அவர் கூறியது சரியா என்பது தெரிந்துவிடும் என்று கூறியுள்ளார்.

காமேனி கூறியது என்ன.?

ஈரானில், அந்நாட்டு அரசுக்கு எதிராக உள்நாட்டு கலவரம் வெடித்த நிலையில், போராட்டக்காரர்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆதரவு தெரிவித்து, ஈரான் அரசுக்கும் எச்சரிக்கை விடுத்தார். அதற்கு ஈரான் பதிலடி கொடுத்த நிலையில், மீண்டும் இறுதி எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.

அதற்கு பதிலளித்த ஈரான் உச்ச தலைவர் அயோத்துல்லா காமேனி, அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால், ஈரான் அதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காது என்றும், இந்த முறை பதில் தாக்குதல் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், இந்த முறை அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது பிராந்திய அளவில் மிகப் பெரிய போராக வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்ததோடு, போர்க்கப்பல்கள் அல்லது விமானங்களை வைத்து அச்சுறுத்தினால் ஈரான் பயப்படாது என்றும் கூறினார்.

அதோடு, அமெரிக்கா போரை பற்றி பேசுவது, போர்க்கப்பல்கள், விமானங்களுடன் வருவோம் என சொல்வது ஒன்றும் புதிதல்ல என்றும், இதுபோன்ற பேச்சுகளால் ஈரான் நாடு பாதிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், இதுபோன்ற ஈரான் நாட்டை மிரட்ட அவர்கள் முயற்சிக்கக் கூடாது என்றும், தாங்கள் ஒருபோதும் மோதலை நாடுவதில்லை என்றும் காமேனி கூறினார். ஆனால், அதே சமயத்தில், எந்த ஒரு ஆக்கிரமிப்புக்கும் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இத்தகைய சூழலில் தான், தற்போது அமெரிக்க அதிபர் மீண்டும் மிரட்டுவது போன்றே ஒரு பதிலை கூறியுள்ளார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

 

 

தலைப்பு செய்திகள்

Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
North Korea Heatwave: “வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
“வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget