மேலும் அறிய

USA Iran War: ஈரானுக்கு எதிரான போர் நிறுத்தத்தை நீட்டித்து ட்ரம்ப் அறிவிப்பு - நிராகரித்த தெஹ்ரான், காரணம் என்ன?

USA Iran War Trump: ஈரானுக்கு எதிரான இடைக்கால போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

USA Iran War Trump: போரில் தோற்கும் நிலையில் உள்ள நாடு நிபந்தனைகளை விதிக்க முடியாது என, அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி தந்துள்ளது.

போர் நிறுத்தத்தை நீட்டித்த ட்ரம்ப்

பேச்சுவார்த்தைக்கு கூடுதல் நேரத்தை வழங்கும் வகையில், ஈரானுக்கு எதிரான இடைக்கால போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முன்மொழிவை ஈரான் சமர்பிக்கும் வரை இடைக்கால போர் நிறுத்தத்தை நீட்டிக்கிறேன். அதேநேரம், ஈரான் துறைமுகங்களை முடக்கும் நடவடிக்கைகள் தொடரும்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக இருதரப்பு இடையே ஏற்பட்ட இரண்டு வாரங்களுக்கான போர் நிறுத்தம் நேற்றுடன் முடியவடைய இருந்த நிலையில், இந்த புதிய இடைக்கால போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரில் நடவடிக்கை

ட்ரம்பின் சமூக வலைதள பதிவில், “எதிர்பார்த்தபடியே, ஈரான் அரசாங்கம் கடுமையாகப் பிளவுபட்டுள்ளது என்பதாலும், பாகிஸ்தான் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரின் வேண்டுகோளின் பேரிலும், ஈரான் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒருமித்த முன்மொழிவுடன் வரும் வரை, அந்நாட்டின் மீதான அமெரிக்காவின் தாக்குதலை நிறுத்தி வைத்துள்ளோம். ஈரான் துறைமுகங்களை முடக்கும் நடவடிக்கைகள் தொடர்வதோடு, மற்ற எல்லா வகையிலும் அமெரிக்க ராணுவம் தயாராகவு, திறமையுடனு இருக்கிறது” என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரான் காட்டம்

இடைக்கால போர் நிறுத்தம் தொடர்பான ட்ரம்பின் அறிவிப்பிற்கு ஈரான் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகரின் ஆலோசகரான மஹ்தி மொஹம்மதி பேசுகையில், "தோற்கும் தரப்பு நிபந்தனைகளை விதிக்க முடியாது. ட்ரம்பின் இந்த இடைக்கால போர் நிறுத்த நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு ஈரானுக்கு எந்த அர்த்தமும் இல்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவிற்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்குமாறு ஈரானுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் பயணத்தை கைவிட்ட ஜே.டி. வான்ஸ்

இடைக்கால போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே, பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் செல்லமாட்டார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இருதரப்புக்கும் இடையேயான நேரடி பேச்சுவார்த்தைகள் தொடர்பான அறிவிப்புகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. தரப்பு கோரிக்கை

ஈரானுடனான போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் அமெரிக்காவின் முடிவை ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டாரெஸ் வரவேற்றுள்ளார். இது ராஜதந்திரத்திற்கும் நம்பிக்கையை வளர்ப்பதற்கும் ஒரு முக்கியமான வாய்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், ”போர் நிறுத்தத்தைக் குலைக்கக்கூடிய நடவடிக்கைகளைத் தவிர்க்கவும், நீடித்த தீர்வை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடவும் அனைத்துத் தரப்பினரையும்” குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
லேட்டா வந்தா அவ்ளோதான்! ஊழியரை வேலையை விட்டு தூக்கிய AI மேனேஜர்... உச்சக்கட்ட பரபரப்பு!
லேட்டா வந்தா அவ்ளோதான்! ஊழியரை வேலையை விட்டு தூக்கிய AI மேனேஜர்... உச்சக்கட்ட பரபரப்பு!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
Embed widget