மேலும் அறிய

China K Visa: சந்தில் சிந்து பாடிய சீனா; H1B விசா சிக்கலான நிலையில், K விசாவை அறிமுகப்படுத்தியது - சலுகைகள் என்ன.?

அமெரிக்காவின் H1B விசா பிரச்னையான நிலையில், அந்த இடைவெளியை பயன்படுத்தி, இளைஞர்களுக்கு பல்வேறு சலுகைகளுடன் சீனா தனது K விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் சிறப்பம்சங்கள் என்ன.? பார்க்கலாம்.

அமெரிக்காவில் வேலைக்கு செல்வோர் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய H1B விசாவிற்கு, ஒரு லட்சம் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 88 லட்சம் ரூபாய் கட்டணத்தை அறிவித்து, அங்கு வேலைக்கு செல்வோரின் வயிற்றில் புளியை கரைத்துள்ளார் ட்ரம்ப். ஆனால், ஒரு நாட்டிற்கு இது வாய்ப்பை வழங்கியிருக்கிறது. ஆம், இந்த பிரச்னையை தனக்கு சாதகமாக்கி, சீனா தனது K விசாவை, பல்வேறு சலுகைகளுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்து தேற்போது பார்க்கலாம்.

H1B விசா - அதிர்ச்சி அளித்த ட்ரம்ப்

அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக, வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும் H1B விசாவின் கட்டணம் 1.47 லட்சம் ரூபாயக இருந்தது. இந்த நிலையில், திடீரென அந்த கட்டணத்தை 88 லட்சம் ரூபாயாக ட்ரம்ப் உத்தரவின் பேரில் அந்நாட்டு அரசு உயர்த்தியது. இந்த H1B விசா மூலம் பயனடைவோர்களில் கிட்டத்தட்ட 71 சதவீதம் பேர் இந்தியர்கள். அதற்கு அடுத்தபடியாக அதிக பயனடைவோர் பட்டியலில் சீனா உள்ளது.

இதையடுத்து, STEM, அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் பணிபுரிவோருக்காக அமெரிக்கா வழங்கி வரும் H1B விசா கட்டண உயர்வு இந்தியர்களை பெரிதும் பாதித்துள்ளது.

சீனா அறிமுகப்படுத்திய ‘கே‘ விசா - சிறப்பம்சங்கள் என்ன.?

இப்படிப்பட்ட சூழலில், இந்த பிரச்னையை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட சீனா, STEM துறைகளைச் சேர்ந்த வெளிநாட்டு இளைஞர்களுக்காக, பல்வேறு சலுகைகளுடன் கே விசா என்ற புதிய விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

சீனாவின் முன்னேற்றத்திற்கு, உலகம் முழுவதிலும் உள்ள திறமையான இளைஞர்கள் தேவை என்று அந்நாட்டு அரசு ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. இதற்காகத் தான் தற்போது இந்த கே விசாவை அந்நாடு களமிறக்கியுள்ளது.

தற்போது சீனாவில் 12 விசாக்கள் நடைமுறையில் உள்ள நிலையில், இந்த கே விசாவில் அவைகளைவிட அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விசாவை வைத்திருப்பவர்கள், சீனாவிற்குள் நுழையும் எண்ணிக்கை, அந்த விசா செல்லுபடியாகும் காலம், அவர்கள் அங்கு தங்கும் காலம் ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த கே விசாவை வைத்திருப்பவர்கள், சீனாவிற்குள், கல்வி, கலாச்சாரம், அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் பணிபுரிவதோடு, அது தொடர்பான தொழில் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளிலும் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ‘கே‘ விசாவிற்கு யார் விண்ணப்பிக்கலாம்.?

சீனாவின் கே விசாவிற்கு விண்ணப்பிக்க, அறிவியல், தெழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

இந்த விசாவிற்கு, வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த, சீன நிறுவனங்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அடிப்படை தகுதியுள்ள இளைஞர்கள், தாங்களாகவே விண்ணப்பித்து ‘கே‘ விசாவை பெற்றுக்கொள்ளலாம். இதனால், இந்த விசாவை பெற்று சீனாவிற்கு சென்று கூட வேலை தேடிக் கொள்ளலாம்.

இந்த விசாவிற்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களின் வயது, கல்வி, அனுபவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, சீன அரசு விசாவிற்கு ஒப்புதல் அளிக்கும். இந்த ‘கே‘ விசா, வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த விசாவிற்கான கட்டண விவரங்கள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. ஆனாலும், அமெரிக்கா அளவிற்கு இல்லாமல், குறைந்த அளவிலேயே கட்டணங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

பிறகென்ன, இனி இளைஞர்கள் அமெரிக்காவிற்கு பதிலாக, சீனாவிற்கு படையெடுக்க வேண்டியதுதான்.

 

தலைப்பு செய்திகள்

Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Embed widget