Lunar Eclipse 2022: வைகாசி நிலவே..! நாளை சந்திரகிரகணம்.. நிகழ்வு எப்போது? எப்படி பார்ப்பது? முழு விவரம்!
Lunar Eclipse Blood Moon 2022: இந்தாண்டு நிகழும் சந்திர கிரகணம் இந்தியாவில் மே 15 மற்றும் மே 16 ஆகிய தேதிகளில் நிகழ்கிறது.
இயற்கை பல ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் உள்ளடக்கியது. அப்படி, நாம் கண்டு வியக்கும் நிகழ்வுகளில் சந்திர கிரணகமும் ஒன்று.
சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் சூரியனைச் சுற்றி வருகிறது. நிலவுக்கும், சூரியனுக்கும் இடையே பூமி வரும்போது அது சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. நிலவுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும் போது,அது முழுமையாகச் சூரியனில் இருந்து வரும் கதிர்களை நிலவின் மீது விழாமல் தடுத்து பூமியின் நிழல் மட்டுமே நிலவின் மீது விழும். இதனால் சந்திரன் மீது சூரிய ஒளி விழுவது தடைப்படுகிறது.
இந்தாண்டு நிகழும் சந்திர கிரகணம் இந்தியாவில் மே 15 மற்றும் மே 16 ஆகிய தேதிகளில் நிகழ்கிறது. இந்திய நேரப்படி, மே 16 ஆம் தேதி காலை 7:02 மணிக்கு தொடங்கி மதியம் 12:20 மணிக்கு முடிவடைகிறது. ஆனால்,இந்தியாவில் சந்திர கிரகணம் தென்படாது.
May's full moon will pass into Earth's shadow, turning a coppery red for those in the viewing area. Here's everything you need to know about the May 15-16 lunar eclipse: https://t.co/MBIsFaM3cW pic.twitter.com/NsqJYkkrRE
— NASA Moon (@NASAMoon) May 11, 2022
இந்நிகழ்வை நாசாவின் இணையதளத்தில், சமூக ஊடக பக்கங்களில் நேரலையில் பார்க்கலாம்.
https://www.youtube.com/watch?v=B8vVqWiv30I என்ற யூடியூப் தளத்தில் காணலாம்.
சந்திர கிரகணம் நிகழ்வின்போது, சில்வர் மற்றும் சாம்பல் நிறத்தில் இருந்து ஆரஞ்சு அல்லது சிகப்பு நிறத்தில் நிலா காட்சியளிக்கும். இந்தாண்டு சந்திர கிரணம் நிகழ்வில், நிலா வழக்கத்தைவிட பெரியதாக தெரியும். ஏனெனில், பூமிக்கு மிக அருகில் நிலவு வருகிறது. இது தென் மற்றும் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் சந்திர கிரகண நிகழ்வைப் பார்க்கலாம்.
Psst! Want to see a total lunar eclipse? Watch #NASAScienceLive on May 15 when Earth sneaks between the Moon and the Sun.
— NASA (@NASA) May 13, 2022
No matter where you are, or if your skies are clear, you can watch with us and @NASAMoon experts ready to answer your questions: https://t.co/oA5JWRRMx1 pic.twitter.com/Dcj9LG4aaJ
இன்றைய நிகழ்வில் வண்ணமிகு நிலவாக காட்சியளிக்கும் என்பதால், இதற்கு Super Flower Blood Moon என்று அழைக்கப்படுகிறது. இந்தாண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் வரும் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி நிகழும்.