மேலும் அறிய

வாடகைக்குக் கூட சம்பளம் பத்தலை! - ஆபிஸையே வீடாக மாற்றிய இளைஞர் : வைரல் டிக்டாக்

சைமன் தனது அலுவலக அறைக்குள் தனது உடைமைகளை வைப்பதைக் காணலாம். அலுவலகத்தில் தனது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் தனக்கான பிரத்யேக ஃபாலோயர்களை அவர் உருவாக்கியுள்ளார்.

அன்றாடச் செலவு நெருக்கடிகள், கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களைப் பாதித்துள்ளது. பல தொழிலாளர்கள் சமூக ஊடகங்களில் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது குறித்து குற்றசாட்டு வைத்துள்ளார்கள்.இந்த பிரச்னை குறித்த பரப்புரைகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன  .இருப்பினும், ஒரு நபர் மட்டும் இந்தச் சிக்கலை தீர்க்க புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். சைமன் என்ற பெயர் கொண்ட அந்த நபர் தனது பணியிடக் க்யூபிக்களுக்கு மாறிய பிறகு, அவரது நிறுவனம் வாடகைக்கு போதுமான பணம் தரவில்லை என்று கூறி தற்போது பெரும் வைரலாகிவிட்டார். TikTok-இல் வெளியிடப்பட்ட ஒரு வைரல் வீடியோவில், சைமன் தனது அலுவலக அறைக்குள் தனது உடைமைகளை வைப்பதைக் காணலாம். அலுவலகத்தில் தனது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் தனக்கான பிரத்யேக ஃபாலோயர்களை அவர் உருவாக்கியுள்ளார்.

" நான் எனது துணிகளைப் பல பைகளில் கொண்டு வந்து இங்கே வைத்துள்ளேன், எனது வாடகையைத் தருவதற்கான சம்பளத்தை அவர்கள் தரவில்லை என்பதால் அதனை எதிர்க்கும் விதமாக நான் என் அலுவலகத்திலேயே வாழப் போகிறேன், என்னை யாரும் கண்டுபிடிக்கக் கூடாது எவ்வளவு நாள் இதில் தாக்குப் பிடிக்க முடியும் எனப் பார்க்கிறேன்.” எனக் கூறியுள்ளார். 

மற்றொரு வீடியோவில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தனது சக பணியாளர்களில் பெரும்பாலோர் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள் என்றும் அதனால் அலுவலகத்தில் அமைதியாக வாழ முடிகிறது என்றும் சைமன் கூறியுள்ளார்.

அவர் தனது ஃபாலோயர்களுக்கு தனது க்யூபிகிளைச் சுற்றிக் காண்பித்தார்.மேலும் தனது உணவு உடைமைகளை எவ்வாறு சேமித்து வைக்கிறார் என்பதையும் அவர்களுக்குக் காண்பித்தார். 

செக்யூரிட்டியிடம் சிக்குவதற்கு வாய்ப்பு உள்ளதா என்று ஒரு ஃபாலோயர் கேட்டதற்கு, "பெரும்பாலான கார்ப்பரேட் அலுவலகங்களில் க்யூபிகல் பகுதியில் கேமராக்கள் இல்லை" என்று சைமன் பதிலளித்தார். மற்றொரு அப்டேட்டில், சைமன் அலுவலக கட்டிடத்திற்குள் இரண்டு ஆண்கள் அறை உள்ளது, மேலும் இலவசமாகப் பயன்படுத்த துண்டுகளும் உள்ளது எனக் கூறியுள்ளார்.

ஆனால் அவர் அலுவலகத்தில் தங்கியது அதிக நாள் நீடிக்கவில்லை. அவர் 'நான்காம் நாளில் தனது அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை உறுதிப்படுத்தினார், மேலும் அலுவலகத்தின் மனிதவள ஊழியர் ஒருவர் சமூக ஊடகங்களில் இருந்து அனைத்து கிளிப்களையும் அகற்றும்படி அவரிடம் கேட்டுக் கொண்டதாகவும். வெளியேற்றத்திற்குப் பிறகு, சைமன் நிறுவனத்துடனான தனது உறவு 'முடிவடைய வாய்ப்புள்ளது' என்றும் கூறியுள்ளார். இருப்பினும் அவரது வேலையின் நிலை என்ன ஆனது எனத் தெரியவில்லை.

இந்த வேலைப் போக வாய்ப்புள்ளது அல்லது நல்லதும் நடக்கலாம் எதுவாக இருந்தாலும் நிறுவனத்தலைவரைப் பொருத்தது எனக் கூறியுள்ளார் சைமன்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
Embed widget