இந்த விஷயத்துக்கு லண்டன்தான் நம்பர் 1 இடமா..! அதிர்ச்சி கொடுக்கும் ஆய்வு முடிவு..
காதல் மற்றும் கள்ளக்காதல் விவகாரங்களில் லண்டன் நகரம் பற்றிய அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
உலகின் அழகான நகரங்களில் முக்கியமான நகரமாக லண்டன் விளங்குகிறது. இந்த நிலையில், தி பாட்டில் கிளப் என்ற நிறுவனம் வித்தியாசமான ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சியையும், ஆச்சரியப்படுத்தியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து தலைநகரின் லண்டனில்தான் உலகிலே அதிகமாக காதல் நடக்கிறது. இந்த ஊரில் உள்ள பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்கள் யாரையாவது காதல் செய்கிறார்களாம். மொத்த மதிப்பெண்ணான 80-ல் லண்டனுக்கு 72.2 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.
காதலில் எப்படி லண்டன் முதலிடத்தில் உள்ளதோ அதே போல ஆபாச வீடியோக்கள் பார்ப்பதிலும் லண்டன்தான் முன்னணியில் இருக்கிறது. லண்டனில் உள்ள சுமார் 1 லட்சம் பேர் ஆபாச வீடியோ தளத்தில் பதிவு செய்துள்ளனராம். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் லண்டனில் 131 அடல்ட் நிகழ்வுகள் நடந்துள்ளது. லண்டனில் உள்ள பலர் ஆபாச செயலிகள் மூலமாக பணமும் சம்பாதிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அதாவது லண்டனைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் தங்களின் நிர்வாண புகைப்படஙகள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து அதன்மூலமாக சம்பாதித்து வருகிறார்கள். லண்டனின் இந்த மாதிரி விவகாரங்களுக்கு முதலிடத்தில் இருப்பது அந்த நகரத்தில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனிற்கு அடுத்த இடத்தில் மேற்கண்ட விஷயங்களில் அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரம் உள்ளது. அந்த நகரம் 80 மதிப்பெண்களுக்கு 67.6 புள்ளிகள் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் நியூயார்க் நகரம் 66.5 புள்ளிகளைப் பெற்றுள்ளது. விசித்திரமான காதல் மற்றும் உறவுகள் விவகாரத்திலும் லண்டன்தான் 39 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள. அந்த வரிசையில் லாஸ் வெகாஸ் 38 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் 32.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
கள்ளக்காதல் விவகாரத்திலும் லண்டன் நகரம் முதலிடத்தில் உள்ளது. லண்டனில் திருமணம் செய்த பெண்கள் பலர் தங்களது கணவர்களுக்கு தெரியாமல் வேறு ஆண்களுடன் உறவு வைத்துள்ளனர். அதேபோல, கணவன்மார்களும் தங்களது மனைவிகளுக்கு தெரியாமல் வேறு பெண்களுடன் உறவு வைத்திருக்கிறார்களாம். உறவுகளுக்குள் ஏமாற்றுவதில் லண்டன்தான் முதலிடத்தில் உள்ளது. இந்த ஆய்வு அறிக்கைகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்