Ecuador: ஈகுவடார் அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ விலாவிசென்சியோ சுட்டுக்கொலை.. அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..
ஈகுவடார் நாட்டில் அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ விலாவிசென்சியோ தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஈகுவடார் நாட்டில் அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ விலாவிசென்சியோ தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்காவின் வடமேற்கு திசையில் ஈகுவடார் என்ற நாடு உள்ளது. அங்கு வரும் 20 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த 8 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்னும் சில நாட்களில் அதிபர் தேர்த்ல் நடைபெற இருக்கும் நிலையில், அங்கு இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈகுவடார் தலைநகரில், build Ecuador moment என்ற கட்சி சார்பில் பெர்னாண்டோ விலாவிசென்சியோ அதிபர் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். அவர் தனது பிரச்சாரத்தை முடித்து விட்டு பிரச்சார வாகனத்தில் ஏற முயற்சி செய்த போது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Indignado y consternado por el asesinato del candidato presidencial Fernando Villavicencio. Mi solidaridad y mis condolencias con su esposa y sus hijas. Por su memoria y por su lucha, les aseguro que este crimen no va a quedar impune.
— Guillermo Lasso (@LassoGuillermo) August 10, 2023
El Gabinete de Seguridad se reunirá en…
இந்த நாட்டின் எல்லையாக மேற்கு பகுதியில் பசிபிக் பெருங்கடல் உள்ளது. இங்கு போதைப்பொருள் கடத்தல் அதிகளவில் நடக்கிறது. மேலும் வன்முறைகளுக்கு பெயர் பெற்ற நாடாக ஈகுவடார் மாறியுள்ளது. நேற்று நடந்த சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது. அவரது இறப்பிற்கு தற்போதைய அதிபர் கில்லர்மோ லாஸ்ஸோ, “ ஜனாதிபதி வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோவின் படுகொலையால் அதிர்ச்சி அடைந்துள்ளேன். அவரது மனைவி மற்றும் மகள்களுக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது நினைவிற்காகவும், அவரது போராட்டத்திற்காகவும், குற்றம் புரிந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.
சில நிமிடங்களில் கரோண்டலெட்டில் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தேசிய தேர்தல் கவுன்சிலின் தலைவரான டயானா அட்டமைண்டிடம் கேட்டேன்; மாநில அட்டர்னி ஜெனரல், டயானா சலாசர்; தேசிய நீதிமன்றத்தின் தலைவர், இவான் சாகிசெலா; ஆகியோரை இந்த சம்பவம் தொடர்பாக விவாதிக்க இந்த கூட்டத்தில் அவசரமாக கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்டு செய்யும் குற்றங்கள் சகஜமாக நடைபெற்று வருகிறது. ஆனால் சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது” என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், பெர்னாண்டோ விலாவிசென்சியோவை சுட்டுக்கொலை செய்தது யார்? இதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து அந்நாட்டு விசாரணை அமைப்பு விசாரணை தொடங்கி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jailer Review: ‘தியேட்டரில் தலைவரு அலப்பறை’ .. ரஜினியின் ஜெயிலர் படம் எப்படி? .. முதல் விமர்சனம் இதோ..!
Repo Rate: கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு..