மேலும் அறிய

Megha-Tropiques-1 (MT1): 10 ஆண்டுகள் செயல்பட்ட மெகா-டிராபிக்யூஸ்-1 செயற்கைக்கோள் அழிக்கப்பட்டதின் பின்னணி என்ன? முழு விவரம்..

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய Megha-Tropiques-1 (MT1) செயற்கைக்கோளை மீண்டும் பூமியின் வளிமண்டலத்திற்கு கொண்டு வந்து அதனை வெற்றிகரமாக அழித்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய Megha-Tropiques-1 (MT1) செயற்கைக்கோளை மீண்டும் பூமியின் வளிமண்டலத்திற்கு கொண்டு வந்து அதனை வெற்றிகரமாக அழித்தது. இதனை இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

 Megha-Tropiques-1, வெப்பமண்டல வானிலை மற்றும் காலநிலை ஆய்வுகளுக்காக இஸ்ரோ மற்றும் பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான CNES ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டுப் பணியாகும். 2011 ஆம் ஆண்டு இந்த செயற்கைக்கோள் விண்ணில் எவப்பட்டது. இந்த பணி ஆரம்பத்தில் மூன்று ஆண்டுகளுக்கு செயல்பட திட்டமிடப்பட்டது, ஆனால் 10 அண்டுகாலமாக காலநிலை பற்றிய முக்கிய தரவுகளை தொடர்ந்து வழங்கியதால் அதன் பணி நீட்டிக்கப்பட்டது.

இஸ்ரோவின் மெகா-டிராபிக்யூஸ்-1 அழிக்கப்படும் காரணம் என்ன?

இஸ்ரோ, அந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, UNIADC க்கு  உறுதியளித்ததன் ஒரு பகுதியாக, செயற்கைக்கோளை செயலிழக்கச் செய்கிறது. UN வழிகாட்டுதல்கள்படி, ஆயுட்காலம் முடிவடைந்த செயற்கைக்கோள்களை அதன் சுற்றுப்பாதையிலிருந்து அகற்ற வேண்டும் அல்லது 25 ஆண்டுகளுக்கு குறைவாக உள்ள சுற்றுப்பாதைக்கு கொண்டு வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.  

அப்படி இல்லை என்றால் அந்த செயற்கைக்கோள் தானாக அழியும் வரை அந்த சுற்றுப்பாதையில் விட்டுவிடலாம். ஆனால் இந்த செயற்கைகோள் 1000 கிலோ எடை கொண்டது. MT1, 867 கிமீ உயரத்தில் 20 டிகிரி சாய்வான சுற்றுப்பாதையில் உள்ளது, இதனை அப்படியே விட்டுவிட்டால் 100 ஆண்டுக்கு மேல் செயல்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் 125 கிலோ எரிபொருள் இருப்பதாகவும், இதனால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதனால் இந்த செயற்கைக்கோளை வேறு ஒரு சுற்றுப்பாதைக்கு கொண்டு வந்து அழிப்பது அவசியம்.  

 முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட வளிமண்டலத்தில் மீண்டும் நுழைவதற்கு செயற்கைக்கோளில் இருக்கும் 120 கிலோ எரிபொருள் போதுமானதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட மறு நுழைவின்போது, இலக்கு வைக்கப்பட்ட பாதுகாப்பான மண்டலத்திற்குள் தாக்கம் ஏற்படுவதை உறுதி செய்வதற்காக மிகக்குறைந்த உயரத்திற்குச் கொண்டு வரப்படும்.

வழக்கமாக, பெரிய செயற்கைக்கோள்கள் மீண்டும் நுழையும் போது aero-thermal fragmentation- இருந்து தப்பிக்கக்கூடியவை. அதற்கு ஏற்றவாறு தான் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.  இருப்பினும் விபத்தை குறைக்க கட்டுப்படுத்தப்பட்ட மறு நுழைவுக்கு உட்படுத்தப்படுகின்றன. அத்தகைய செயற்கைக்கோள்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்ட மறு-நுழைவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளன” என இஸ்ரோ கூறியுள்ளது.

இந்த செயற்கைக்கோளை அழிக்க இஸ்ரோ 18 முறை அதன் சுற்றுப்பாதையை மாற்றியுள்ளது. இறுதி இரண்டு சுற்றுப்பாதை மாற்றங்கள், பூமிக்குள் மீண்டும் நுழைவதற்கும் வளிமண்டலத்தில் எரிவதற்கும் வழிவகுக்கும் என கூறப்பட்டது. இஸ்ரோ பசிபிக் பெருங்கடலில் மக்கள் வசிக்காத பகுதியை MT1-க்கான இலக்கு மறு நுழைவு மண்டலமாக தேர்ந்தெடுத்து நேற்று மாலை 4:30-7:30 க்குள் அழிக்கப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget