மேலும் அறிய

Miss Netherlands: மிஸ் நெதர்லாந்து பட்டம் வென்ற முதல் திருநங்கை… இன்ஸ்டாகிராமில் குவியும் வாழ்த்துக்கள்!

மிஸ் நெதர்லாந்து 2023: இந்த போட்டியில் பங்கேற்ற இரண்டாவது திருநங்கை ரிக்கி என்பது குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டில், ஸ்பெயினைச் சேர்ந்த ஏஞ்சலா போன்ஸ் போட்டியில் பங்கேற்ற முதல் திருநங்கை மாடல் ஆவார்.

இந்த ஆண்டின் மிஸ் நெதர்லாந்து பட்டத்தை திருநங்கை ஒருவர் வென்றுள்ள செய்தி பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.

மிஸ் நெதர்லாந்து வென்ற முதல் திருநங்கை 

ரிக்கி வலேரி கோலே என்ற பெயர் கொண்ட இவர் நெதர்லாந்தில் மாடலிங் துறையில் பிரபலமாக உள்ளார். 22 வயதாகும் இவர் ஒரு நடிகையும் கூட. முதன் முறையாக திருநங்கை ஒருவர் இந்த பட்டதை வென்றுள்ள நிலையில், ரிக்கியின் தைரியம் மற்றும் வைராக்கியத்தை பலர் பாராட்டி வருகின்றனர். நெட்டிசன்கள் பலரின் அன்பையும்  வாழ்த்துக்களையும் அவர் பெற்றிருக்கிறார். 

View this post on Instagram
 
A post shared by Rikkie Valerie Kollé (@rikkievaleriekolle)

சமூக வலைதள பதிவு

ரிக்கி இந்த பட்டத்தை வென்ற உடனேயே, அவர் வெற்றி பெற்ற தருணத்திலிருந்து பல படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். அதோடு அதில் அவர் ஒரு நீண்ட பதிவை எழுதினார். அந்த பதிவின் முதல் வாக்கியம் அனைவரையும் சிலிர்க்க வைத்தது, "I DID IT", என்று பெருமை கொண்டு எழுதி இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்: Rahul Gandhi Mechanic Video: “பைக் ஓட்ட விடமாட்றாங்க” - மெக்கானிக்குகளிடம் புலம்பிய ராகுல் காந்தி.. வைரல் வீடியோ..!

மிகவும் பெருமையாக உணர்கிறேன்

அந்த நீண்ட பதிவின் ஒரு பகுதியாக, "நான் மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன், அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. இதன் மூலம் எனது சமூகத்தை பெருமைப்படுத்தவும், அதை வெளியில் கொண்டு வரவும் முடியும், " என்று எழுதினார். மேலும், "ஆம், நான் திருநங்கை தான், எனது கதையைப் பகிர விரும்புகிறேன், ஆனால் நான் ரிக்கியும் கூட தான், அதுதான் எனக்கு முக்கியமானது. இதை நான் என் சொந்த முயற்சியில் செய்தேன், அதன் ஒவ்வொரு தருணத்தையும் விரும்பி செய்தேன்." என்று எழுதினார்.

View this post on Instagram
 
A post shared by Rikkie Valerie Kollé (@rikkievaleriekolle)

கடினமான பயணம்

முன்னதாக பல நேர்காணல்களில் ரிக்கி இந்த போட்டியில் தனது பயணம் ஏற்ற இறக்கங்கள் நிரம்பியதாக பல செய்தி நிறுவனங்களுக்கு குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், அவருடைய குடும்பத்தின் அபரிமிதமான அன்பும் ஆதரவும்தான் அவரை அனைத்தையும் கடந்து இந்த இடத்திற்கு வர வைத்தது என்றார். இந்த போட்டியில் பங்கேற்ற இரண்டாவது திருநங்கை ரிக்கி என்பது குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டில், ஸ்பெயினைச் சேர்ந்த ஏஞ்சலா போன்ஸ் போட்டியில் பங்கேற்ற முதல் திருநங்கை மாடல் ஆவார், ஆனால் அவர் அப்போது வெற்றி பெறவில்லை என்றாலும், முதன் முறை அதில் கலந்து கொண்டதன் மூலம் அவர் தனது சக்திவாய்ந்த நிலைப்பாட்டை பதிந்து, வரலாற்றைப் படைத்திருந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget