JUICE Satellite: வியாழன் கோளை சுற்றி உள்ள ஐஸ் நிலாக்கள்.. தீவிர ஆய்வு மேற்கொள்ளும் ஜூஸ் செயற்கைக்கோள்..!
ஏர்பஸ் உருவாக்கிய ஜூஸ் செயற்கைக்கோள் (ஜூபிடர் ஐசி மூன்ஸ் எக்ஸ்ப்ளோரர்) ஏரியன் 5 விண்கலம் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஏர்பஸ் உருவாக்கிய ஜூஸ் செயற்கைக்கோள் (ஜூபிடர் ஐசி மூன்ஸ் எக்ஸ்ப்ளோரர்) ஏரியன் 5 விண்கலம் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஏரியன் 5 விண்கலம் நேற்று வியாழன் கோளை நோக்கிய தனது பயனத்தை தொடங்கியது.
From tropical forests of Earth to the Moons of Jupiter. Godspeed #JUICE 🛰️
— Sibu Tripathi 🪂 (@imsktripathi) April 14, 2023
Picture-perfect lift-off 🚀 pic.twitter.com/XGryr5rtSd
ஜூஸ் செயற்கைகோள்:
ஜெர்மனியின் டார்ம்ஸ்டாட்டில் உள்ள ESOC (ஐரோப்பிய விண்வெளி இயக்க மையம்) அமைந்துள்ள ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் (ESA) விண்கல செயல்பாட்டுக் குழு, விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட பின் வெற்றிகரமாக புவி வட்டார பாதையில் நுழைந்தது என அறிவித்துள்ளது. இன்னும் சில நாட்களில் அதிக தொழில்நுட்பங்கள் கொண்டு ஜூஸ் செயற்கைக்கோளின் செயல்பாடுகள் குறித்து சோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல வருட கடின உழைப்பிற்குப் பின், ஐரோப்பாவில் இருந்து இந்த விண்கலம் ஏவப்பட்டது அனைவருக்குமே ஒரு நெகிழ்ச்சியான தருணம் என Courou இல் உள்ள Airbus Defense and Space இன் CEO மைக்கேல் ஸ்கோல்ஹார்ன் கூறியுள்ளார். ஏர்பஸ் - ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்துடன் (ESA) மேற்கொண்ட ஒப்பந்தத்தின் கீழ், 23 நாடுகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின் உதவியுடன் JUICE செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 6.2 டன் எடையுள்ள ஜூஸ் செயற்கைகோள், 5 பில்லியன் கிலோமீட்டரைத் தாண்டிய பயணத்தைக் மேற்கொண்டுள்ளது, வியாழனில் இருக்கும் நிலவுகளின் மேற்பரப்பில் நுண்ணுயிரிகளின் இருப்பு தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.
ESA's #Juice lifted off on an #Ariane5 rocket from @EuropeSpacePort in French Guiana at 13:14 BST/14:14 CEST on 14 April. This launch marks the beginning of an ambitious voyage to uncover the secrets of the ocean worlds around the giant planet #Jupiter👉 https://t.co/4Zn9BCUsuP pic.twitter.com/XzrKMAQtvU
— ESA (@esa) April 14, 2023
ஜூஸ் செயற்கைக்கோளின் 4 ஆண்டு பயணத்தில் பத்து அதிநவீன அறிவியல் கருவிகளைக் கொண்டு செல்லும். கேமராக்கள், ஸ்பெக்ட்ரோமீட்டர்கள், அல்டிமீட்டர், ரேடியோ-அறிவியல் பரிசோதனை, பனி-ஊடுருவக்கூடிய ரேடார், package, and multiple magnetic and electric field sensors ஆகியவை அடங்கும். வியாழன் கோளில் பல நிலவுகள் உள்ளது. தொலைநோக்கியைப் பயன்படுத்தி 1610 ஆம் ஆண்டில் இத்தாலிய வானியலாளர் கலிலியோ கலிலியால் பனியால் மூடப்பட்ட காலிஸ்டோ, கேனிமீட் மற்றும் யூரோபா (ஜூபிடரில் இருக்கும் நிலவுகள்)ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. வியாழனைச் சுற்றி சிறிய புள்ளிகளாக இவை தென்பட்டது.
ஜூஸ் செயற்கைக்கோள் நிலவில் தரையிறங்காமல் அதனை சுற்றி ஆய்வை மேற்கொள்ளும். கேனிமீட் - சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய நிலவை பற்றி ஆய்வு மேற்கொள்ளும். இது 2034 இல் புவிசுற்றுப்பாதையில் சென்று அதன் சுற்றுப்பயணத்தை முடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளில் இருக்கும் ரேடார்கள் நிலவுகளை தெளிவாக பார்க்க உதவும். lidar, a laser measurement device நிலவின் மேற்பரப்பை முப்பரிமான முறையில் படம்பிடிக்க உதவும். அதில் பொருத்தப்பட்டிருக்கு கேமராக்கள் எண்ணற்ற புகைப்படங்களை எடுத்து ஆய்வுக்காக அனுப்பும். இந்த செயல்பாடுகளை மேற்கொள்ள அதில் பொருத்தப்பட்டிருக்கும் சோலார் பேனல்கள் உதவும் என விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.