(Source: ECI/ABP News/ABP Majha)
தானியங்கி டெஸ்லா கார் விபத்தில் இருவர் பலி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 'ஆட்டோ பைலட்' முறையில் இயக்கப்பட டெஸ்லா கார் விபத்துக்குள்ளாகி இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 'ஆட்டோ பைலட்' முறையில் இயக்கப்பட்ட டெஸ்லா கார் விபத்துக்குள்ளாகி இருவர் உரியிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடல் எஸ் வகையை சார்ந்த 2019ம் ஆண்டு டெஸ்லா கார் அதுவென்பவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்த 'மாடல் எஸ்' கார்கள் தான் டெஸ்லா கார்களில் வெளியான முதல் தானியங்கி கார். அன்று தொடங்கி இன்று வரை பல தானியங்கி கார்களை டெஸ்லா வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அறிவியல் கண்டுபிடிப்புகளின் உச்சமாக தானியங்கி வாகனங்கள் பார்க்கப்படுகிறது. விமானம், கப்பல், ரயில் போன்ற பல போக்குவரத்துக்கு வாகனங்கள் பல ஆண்டுகளாக தானியங்கி முறையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மக்களின் அன்றாட பயன்பாட்டில் இந்த தானியங்கி கார்களின் ஆதிக்கம் தற்போது அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. இதில் தானியங்கி கார் தயாரிப்பில் டெஸ்லா நிறுவனம் முன்னோடியாக திகழ்கின்றது என்றால் அது மிகையல்ல.
பிரபல SpaceX நிறுவன தலைவர் எலன் மஸ்க்கினால் கடந்த 2003ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் டெஸ்லா நிறுவனம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆட்டோமொபைல் துறையில் இயந்திரம் என்பதை தாண்டி டெக்னாலஜி என்ற விஷயத்திற்கு அதிக அளவில் டெஸ்லா நிறுவனம் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. குறிப்பாக தானியங்கி கார்களின் ஆதிக்கத்தை அந்த நிறுவனம் அதிகரித்து வருகின்றது. உலக மார்க்கெட்டில் தானியங்கி கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதேசமயம் இந்த கார்களால் அவ்வப்போது சில விபத்துகளும் பதிவாகி வருகின்றது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று இரவு 11 மணியளவில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அதிவேகமாக பயணித்த 2019 மாடல் எஸ் கார் ஒரு வளைவில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த இருவரும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 59 மற்றும் 69 வயது உள்ள அந்த இருவரும் பயணித்த அந்த வாகனம் தானியங்கி மோடில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துக்குள்ள அந்த கார் உடனடியாக தீப்பிடத்த நிலையில் ஓட்டுநர் இருக்கையில் இருந்தவரும் அவருக்கு பின்னல் இருந்தவரும் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அந்த தீயை அணைக்க நான்கு மணிநேரம் தேவைப்பட்டது என்றும், மேலும் தீயை அணைக்க 30,000 கேலன் தண்ணீர் தேவைப்பட்டது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தானியங்கி முறையில் ஓடிக்கொண்டிருந்த டெஸ்லா நிறுவன கார் ஒன்று அதிவேகத்தில் சென்று விபத்துக்குள்ளானது அந்த நிறுவனத்திற்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடந்து வருகின்றது. விசாரணைக்கு பிறகே ஆட்டோ பைலட் முறையில் நடந்த இந்த விபத்து குறித்த முழுவிவரம் வெளியாகும்