Watch Video | ஆப்கன் அரசு ஊழியர்களை சித்ரவதை செய்த தலிபான்கள்: பதறவைக்கும் வீடியோ
ஆப்கன் அரசு ஊழியர்களை தலிபான்கள் சித்ரவதை செய்த வீடியோ காண்போரைக் கலங்க வைத்துள்ளது.
ஆப்கன் அரசு ஊழியர்களை தாலிபான்கள் சித்ரவதை செய்த வீடியோ காண்போரைக் கலங்க வைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தாலிபான் அமைப்பு கைபற்றியது. இதன்மூலம், ஆப்கான் நாட்டின் அதிகாரப்புள்ளியாக தலிபான் உருவெடுத்துள்ளது.
1990 வரை அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் இடம்பெற்ற பனிப் போர் தான் ஆப்கான் பிரச்சனையை பூதாகரமாக்கியது. ஆப்கானித்தானில் இருந்து சோவியத் படைகள் வெளியேற்றுவதற்காக முஜாஹிதீன்கள் என்ற தாக்குதல் படையை அமெரிக்கா உருவாக்கியது.
மேலும், பிரித்தாளும் கொள்கையின் மூலம் ஆப்கானின் முஜாஹிதீன்கள், தாலிபான்கள், சமவுடைமைவாதிகள், மறுசீரமைப்பாளர்கள் போன்ற பல்வேறு குழுக்களிடையே பிரிவினைவாதத்தையும் ஏற்படுத்தியது. 90களில் சோவியத் படை வெளியேற்றப்பட்ட பிறகு, அமெரிக்கா தனது இருத்தலை குறைத்துக் கொண்டது. இதனையடுத்து, ஏற்பட்ட உள்நாட்டுப் பிரச்சனையை தீர்ப்பதற்காக உருவானது தான் தாலிபான் அமைப்பு.
உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டுதல்; ஆயுதங்களை கைவிடுதல் தியோபந்தி கருத்துகள் அடிப்படையில் ஷ்ரியா சட்டத்தை அமல்படுத்துதல் போன்ற மூன்று கொள்கையைத் தான் 90களில் தலிபான் முன்னெடுத்தது. 1990களில் ஆப்கன் தலிபான்கள் ஆட்சியில் சிக்கித் திணறியது. 2001ல் அமெரிக்காவில் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, ஆப்கான் மீது அமெரிக்கா போர் அறிவித்தது. இதில், பல தலிபான் தலைவர்கள் கொல்லப்பட்டனர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியது.
இருப்பினும், ஆப்கானிஸ்தானில் தலிபன்களின் இருத்தலை அமெரிக்காவால் நீக்க முடியவில்லை. இந்த 20 ஆண்டுகால வாழ்கையில் ஒருமுறை கூட அமெரிக்கா ராணுவத்தை தலிபான்களால் தோற்கடிக்கப்படிக்க முடியவில்லை. மிகப்பெரிய போர் யுத்தமும் அதனிடமில்லை. அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர் மீண்டும் அங்கு தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், ஆப்கன் அரசு ஊழியர்களை தாலிபான்கள் சித்ரவதை செய்த வீடியோ காண்போரைக் கலங்க வைத்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழக பேராசிரியர் ஹெக்மத்துல்லா மிர்சதா கூறும்போது, ஆட்சி அமைத்ததுமே தலிபான்கள் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றனர். ஆனால் அவர்கள் வாக்கைக் காப்பாற்றவில்லை. அவர்கள் சொன்னபடி நடந்து கொண்டால் தான் மக்களுடன் இணக்கமான அரசாக செயல்பட முடியும் என்றார்.
முன்னாள் ராணுவ அதிகாரி ரஹ்மத்துல்லா அண்டார் கூறுகையில், இஸ்லாமிக் எமிரேட் அரசு சொன்னபடி பொது மன்னிப்பை அனைவருக்கும் வழங்க வேண்டும். எல்லா மக்களும் மாண்புடன் நடத்தப்பட வேண்டும் என்றார். ஆனால், வீடியோ ஆதாரம் இருந்தும் தங்கள் மீதான குற்றச்சாட்டை தலிபான்கள் ஒப்புக்கொள்ளவில்லை. தலிபான்களின் இந்தப் போக்கு ஆப்கானிஸ்தான் தன்னை ஒரு நாடாக சர்வதேச அரங்கில் நிலைநாட்டிக் கொள்ளவே முடியாது என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.