watch video : துப்பாக்கிச் சத்தம் கேட்டுச்சு.. பிறகு கரும்புகை.. சாம்பலாய் போன ரூ.98 கோடி மதிப்பு படகு!
ரூ.98 கோடி மதிப்புள்ள சூப்பர் படகு ஒன்று தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர்சாட் படகு
இங்கிலாந்தின் டெவோனில் உள்ள டார்குவே துறைமுகப் பகுதியில் சூப்பர்சாட் படகு ஒன்று , உள்ளூர் நேரப்படி மாலை நான்கு மணியளவில் தீப்பிடித்து எரிந்துள்ளது. 85 அடி உயரமுள்ள கப்பலில் தீப்பற்றியதையடுத்து, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. சுற்றுச்சூழல் ஏஜென்சியின் கூற்றுப்படி, படகில் ஒன்பது டன் டீசல் இருந்தது தெரியவந்துள்ளது. அது கடலில் கலந்ததால் தற்போது கடல் நீர் மாசு அடைந்துள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.மாசுபாட்டை கட்டுப்படுத்த அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். நேற்று பிற்பகல் டார்குவே துறைமுகத்தைச் சுற்றியுள்ள காற்றின் தரத்தையும் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். ஆனால் அதில் எந்தவித பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருந்தாலும் தொடர்ந்து தர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Fire Torquay Harbour. Hopefully no injuries. @devonlive #fire pic.twitter.com/osnYixShWW
— Georgina Cleasby (@cleasbyg02) May 28, 2022
@DevonLiveNews Boat on fire in Torquay harbour pic.twitter.com/kwTxmNyv2D
— Mykie🏳️🌈 (@Mykie0121) May 28, 2022
துப்பாக்கியால் சுடுவது போன்ற சத்தம்
டெவோன் மற்றும் சோமர்செட் தீயணைப்பு துறை உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணியளவில் சம்பந்தப்பட்ட துறைமுகத்திற்கு வந்தடைந்ததாக கூறப்படுகிறது. மதிய நேரத்தில்தான் படகு கரையொதுங்கியதாக காவல்துறை மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும் அங்கிருக்கும் உள்ளூர் வாசி ஒருவர் “துறைமுகத்தில் இருந்து துப்பாக்கியால் சுடுவது போன்ற சத்தம் கேட்டது, அதைத் தொடர்ந்து பெரிய கறுப்பு புகை மூட்டம் வந்தது," என தெரிவித்திருக்கிறார்.
Oh dear. A 6 million pound yacht has been completely destroyed in Torquay harbour. pic.twitter.com/tna0DV1JJo
— McGregor The Westie 🇬🇧 (@McgregorWestie) May 28, 2022
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.என தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டு படகு கரை ஒதுங்கியதும் அது வெடித்து சிதறும் அபாயம் இருந்ததால் அப்பகுதியில் இயங்கிய கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. பொதுமக்களுக்கு கடற்கரையினுள் செல்ல தடை விதிக்கப்பட்டது. நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால் மீண்டும் பொதுமக்களை அதிகாரிகள் அனுமதித்ததாக தெரிகிறது. எரிந்து போன சூப்பர் சாட் படகின் மதிப்பு 6 மில்லியன் பவுண்ட்ஸ் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது விபத்திற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.