மேலும் அறிய

சாப்பிட்டு வைத்த சாண்ட்விச்சுக்கு ரூ.1.43 லட்சம் அபராதம்.. ஷாக்கில் மாடல் அழகி!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மாடல் அழகி ஜெஸிக்கா லீ, தனக்கு நேர்ந்த அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

என்னது சாண்ட்விச் சாப்பிட்டதற்கு அபராதமா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் அதுதான் உண்மை. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மாடல் அழகி ஜெஸிக்கா லீ, தனக்கு நேர்ந்த அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

பயணத்தின் போது பசியும் கூடவே வரும். நம்மூரில் எல்லாம் இன்னமும் பயணத்திற்கு கட்டுச் சோறு கட்டிச் செல்லும் வழக்கம் இருக்கிறது. ஓட்டல் உணவு ஆகாது, செலவு தாக்குப்பிடிக்காது என நினைப்பவர்கள் கட்டுச் சோற்றை எடுத்துச் செல்வர். சிலர் பயணம் என்பதே வழியில் கிடைப்பதை புசிப்பதற்குத் தானே என்று செல்லும் வழியெல்லாம் ஏதாவது கிடைப்பதை வாங்கி அசைபோடுவர். இன்னும் சிலர் இருக்கின்றனர். சாப்பிடுவதற்காகவே பயணம் செய்பவர்கள். அவர்கள் தான் ஃபுட் ப்ளாக், ஃபுட் வ்லாக் என நடத்தி யூடியூப்பில் கல்லா கட்டி வருகின்றனர். இப்படி உணவும் பயணமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது. அப்படி பயணத்தின் போது பசியாற வாங்கிய உணவு ஒரு பெண்ணுக்கு பெருந் தொகையை அபராதமாக கட்ட வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கியுள்ளது.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் ஐரோப்பாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு பயணித்தேன். அப்போது சிங்கப்பூர் விமான நிலையத்தில் நான் ஒரு சப்வே சாண்ட்விச்சை வாங்கினேன். ஏனென்றால் 11 மணி நேர பயணம் அது. ஏற்கெனவே நிறைய பயணங்களால் சோர்ந்து போய் பசியுடன் இருந்தேன். ஆகையால் 12 இன்ச் அளவிலான அந்த சாண்ட்விச்சை வாங்கினே. அங்கேயே அதில் பாதி ஆறு இன்ச் அளவு சாப்பிட்டுவிட்டேன். மீதம் இருந்ததை பயணத்தின்போது சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று பத்திரப்படுத்திக் கொண்டேன். 

ஆனால் என்னால் அதை முழுவதுமாக சாப்பிட முடியவில்லை. அது எனது பையில் இருந்தது. அது குறித்து நான் ஆஸ்திரேலிய கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் விவரிக்கவில்லை. எனது கைப்பை மற்றும் பிற உடைமைகளின் விவரத்தை மட்டும் சொன்னால் போதும் என நினைத்து விட்டுவிட்டேன். எனது லக்கேஜில் இருந்த உணவில் சிக்கன் இருப்பதை தெரிவித்த நான் லெட்டூஸ் இருப்பதைத் தெரிவிக்கவில்லை. அதனால் எனக்கு 2,664 ஆஸி டாலர் அபராதம் விதித்தனர். (இந்திய மதிப்பில் ரூ.1.43 லட்சம்). இதை நான் 28 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். நான் அண்மையில் தான் வேலையில் இருந்து விலகினேன். இப்போது இவ்வளவு பெரிய தொகையை என்னால் உடனே செலுத்த முடியுமா என்று தெரியவில்லை. இது என்னுடைய தவறு தான் என்று நான் உணர்கிறேன். என் தவறுக்கு பொறுப்பேற்று அபராதத்தைக் கட்ட முயற்சிகள் எடுத்து வருகிறேன். என்னைப் போன்ற காஸ்ட்லி தவறுகளை யாரும் செய்துவிடக் கூடாது என்பதற்காகவே இதனை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவிக்கிறேன் என்றார்.

ஜெசிக்கா லீ ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார். அதில் சப்வே சாண்ட்விச்சின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு பதிவையு படித்த நெட்டிசன்கள் பலவாறாக கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர், அந்தப் பெண்ணின் தவறுதான் என்றும் இன்னும் சிலர் முதல் முறையாக இருந்திருந்தால் ஆஸி அரசு அவருக்கு எச்சரிக்கையுடன் தண்டனையை குறைத்திருக்கலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget