Viral video: பூமியில் இன்னும் உயிருடன் உள்ளதா டைனோசர்...? சந்தேகத்தை கிளப்பும் வைரல் வீடியோ..!
Viral video: டைனோசர் போல காட்சியளிக்கும் விநோத உயிரினத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டைனோசர் எனும் உயிரினம் என்பது 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ராட்சத விண்கல் பூமி மீது மிகவும் வேகமாக மோதியதால் அழிந்து விட்டதாக ஆய்வுகள் கூறி வந்தது. ஆனால் சமீபத்திய ஆய்வு விண்கல் பூமியை வந்து தாக்குவதற்கு முன்னதாகவே டைனோசர் இனம் அழிவை எதிர்கொள்ள தொடங்கியது என சமீபத்திய ஆய்வு ஒன்றும் கூறுகிறது.
டைனோசரைப் பற்றிய தகவல்கள் எப்போது எப்படி வந்தாலும், உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பெரும் ஆர்வம் தொற்றிக் கொள்கிறது. திரைப்படங்கள், கற்பனை படங்கள் என பலவற்றில் நாம் டைனோசரை பார்த்திருந்தாலும், அதனை நேரடியாக பார்க்க நேர்ந்தால், நமக்குள் ஏற்படும் பரவசமும் ஆர்வமும் அளவில் அடங்காதது.
View this post on Instagram
ஒரு சிலருக்கு இன்னும் இருக்கக்கூடிய சந்தேகம் டைனோசர் எனும் உயிரினம் இருந்ததா என்பது தான். ஆனால் அறிவியல் அய்வுகளை தரவுகளாக கொண்டு விளக்க முற்படும் போது டைனோசரை பற்றிய தகவல் மீது நம்பிக்கை ஏற்படும். உலகின் பல்வேறு உயிரினங்கள் டைனோசரில் இருந்து பரிமாணமாகி வந்ததுதான் என பல அறிவியல் ஆய்வுக்ளும் விளக்குகின்றன.
இணையம் வளர்ந்த பிறகு உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் நடக்கும் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான நிகழ்வுகள் அனைத்தும் கண்ணிமைக்கும் உலகம் முழுவதும் வைரலாகி விடுவது வழக்கமாக இருக்கிறது. அவ்வகையில் இணையத்தில் தற்போது ஒரு வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
ஒரு பெரிய வாகனத்தின் சக்கரத்தில் ஒரு சிறிய உயிரினம் அமர்ந்துள்ளது. அது பார்ப்பதற்கு டைனோசரின் சிறிய உருவம் போல் உள்ளது. இதனை வீடியோ எடுத்த நபர் அந்த உயிரினத்தின் முன்பு ஒரு குச்சியைக் காட்டி, தொடுவதுபோல் செல்கிறார். உடனே சிறிய டைனோசர் போல் உள்ள அந்த உயிரினம் அந்த குச்சியைக் கடிக்க பார்க்கிறது. அப்போது அந்த நபர் கத்துகிறார். அதன் பின்னர் மீண்டும் அவர் அந்த குச்சியை அந்த உயிரினத்திடம் கொண்டு செல்கிறார். ஆனால் உடனே அந்த உயிரினம் தனது உடலினை கீழே கொண்டு செல்கிறது. இந்த உயிரினத்தினைப் பார்த்துவிட்டு அதனை வீடியோ எடுக்கும் அந்த நபர் இதனை சிறிய அளவிலான டைனோசராக இருக்குமோ என கூறுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. டைனோசர் போல காணப்படும் இந்த உயிரினம் நீண்ட தடிமனான கழுத்தினையும் மிகவும் ஒல்லியான வாலினையும் கொண்டுள்ளது.
பார்ப்பதற்கு டைனோசர் போல அந்த உயிரினம் இருப்பதால் இதனை பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.