Srilankan Economic Crisis: நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுக - கோத்தபயவிற்கு சபாநாயகர் கோரிக்கை !
இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று சபாநாயகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் நடந்து வரும் மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்து பிரதமர் பதவியை ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவருக்கு சொந்தமான வீட்டை பொதுமக்கள் நேற்று இரவு தீ வைத்து கொளுத்தினர். இத் தொடர்ந்து கொழும்பில் உள்ள பிரதம மந்திரிக்கு சொந்தமான அலரி மாளிகையில் இருந்து பலத்த ராணுவ பாதுகாப்புடன் மஹிந்த ராஜபக்சே வெளியேறினார்.
இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று சபநாயகர் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
it's fine they're protesting outside the house pic.twitter.com/NfUviNq1wT
— New York Year Zero (@newyorkyearzero) May 10, 2022
முன்னதாக நேற்று இரவு முதல் இலங்கை நாட்டில் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் அந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால், கடுமையான அவதிக்குள்ளாகிய மக்கள் அந்த நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். ராஜபக்சே குடும்ப அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
Update: The Rajapaksa ancestral home in Medamulluna has been set on fire. pic.twitter.com/qO4L4fEypN
— DailyMirror (@Dailymirror_SL) May 9, 2022
மக்களின் போராட்டத்தை எதிர்த்த ஆளுங்கட்சி எம்.பி.யான அமரகீர்த்தி அத்துகொரலா மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால், ஆத்திரமடைந்த மக்கள் அவரை துரத்திச் சென்றனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கு பயந்த எம்.பி. அமரகீர்த்தி தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அமைச்சர், அரசியல் தலைவர்கள் உள்பட 35 பேரின் இல்லங்களுக்கு தீ வைத்து எரித்தனர். தற்போது இலங்கை அரசுக்கு எதிராக கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தபால் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த 1000 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்