Watch Video : பிரதமர் படுக்கையில் அதிரடியாக நடந்த மல்யுத்தம்... வெளியான வைரல் வீடியோ..!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக முன்வந்த பின்னரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் பொதுமக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களை அவர்கள் அடித்து நொறுக்கியதோடு, தீ வைத்து எரித்தனர்.
போராட்டக்காரர்களிடம் இருந்து தப்பித்த கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் பரவிய நிலையில் இன்று தனது அதிபர் பதவியையும் ராஜினாமா செய்தார். தொடர்ச்சியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிபராக பதவி ஏற்க இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில், போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டபோது நீச்சல் குளத்தில் குளிப்பது, சமையலறையில் உணவருந்துவது, படுக்கையறைகளில் ஓய்வெடுப்பது, குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அந்தவரிசையில், தற்போது பிரதமரின் படுக்கையில் மல்யுத்தம் விளையாடுவது போன்ற மற்றொரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "Sri Lanka Tweet" என்ற ட்விட்டர் பக்கத்தில் பயனாளர் ஒருவர் வெளியிட்ட வீடியோவில், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் உள்ள படுக்கையில் இளைஞர்கள் குழு ஒன்று WWE என்ற மல்யுத்த போட்டி விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக முன்வந்த பின்னரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Video - #WWE Wrestling on Prime Minister's bed at Temple Trees 😃#LKA #SriLanka #SriLankaCrisis #SriLankaProtests pic.twitter.com/5f2zE9uqLD
— Sri Lanka Tweet 🇱🇰 💉 (@SriLankaTweet) July 10, 2022
பிரதமர் ஆகும் ரணில் விக்கிரமசிங்க..?
இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிடம், அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கோத்தபய ராஜபக்சே எங்கிருக்கிறார் என்ற விவரங்கள் தெரியாத நிலையில், ரணில் விக்கிரமசிங்கேவை அதிபர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு எம்பிக்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால் வரும் புதன்கிழமை அதிபராக பொறுப்பேற்றுக்கொள்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், அனைத்துக் கட்சிகள் கலந்த அரசை அமைக்க எதிர்க்கட்சிகள் ஒத்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்