மேலும் அறிய
Advertisement
Srilanka Crisis: தப்பிச்சென்ற கோட்டபய ராஜபக்ச.. மாலத்தீவு அதிபர் அலுவலகம் முன்பு மக்கள் போராட்டம்..
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு பிரதமர் கோட்டபய ராஜபக்ச தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சென்றுள்ளார்.
இலங்கையில் இருந்து தப்பி தஞ்சம் அடைவதற்காக அதிபர் கோட்டபய ராஜபக்ச மாலத்தீவை சென்று அடைந்தார் .இந்நிலையில் அங்கிருந்து வெளியேறுமாறு அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
அதிபர் கோட்டபயவை மாலத்தீவில் இருந்து வெளியேறுமாறு மாலைத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பதிவிலேயே இந்த எதிர்ப்பை அவர் பதிவிட்டு இருக்கிறார்.
ask him to go back
— Thayyib #Maldives (@thayyib) July 13, 2022
மாலத்தீவில் கோட்டபயவுக்கு புகலிடம் வழங்கக்கூடாது என அவர் வலியுறுத்தி இருக்கிறார். அவருக்கு அகதி அந்தஸ்த்தும் வழங்கக்கூடாது என அவர் மாலத்தீவு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் மக்கள் முன்னெடுத்துள்ள புரட்சிக்கு மாலத்தீவு மக்களும் ஆதரவு தெரிவிப்பதாக தனது ட்விட்டர் பதிவில் சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் குறிப்பிட்டுள்ளார். கோட்டபயவை மாலத்தீவை விட்டு வெளியேற்றுமாறும் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.
#Maldivas Not to provide Refuge or Asylum to GR.
— Thayyib #Maldives (@thayyib) July 12, 2022
The people of Maldives 🇲🇻 stands with the people of #Srilanka 🇱🇰
இன்று அதிகாலை மாலத்தீவுக்கு சென்ற இலங்கை அதிபர் கோத்தாபய ராஜபக்சவுக்கு மாலத்தீவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிபர் கோட்டபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் தரையிறங்கியவுடன் விமான நிலையத்தில் இருந்த இலங்கை மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
கோட்டபய ராஜபக்ச குடும்பத்தினர் பாதுகாப்பான முறையில் கார்களில் அழைத்துச் செல்லப்படுவதை வீடியோ எடுத்துள்ள ஒரு நபர் ,இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதை காண முடிகிறது.
please note this motorcade is not for GR, this is Maldives Parliament Speaker's Motorcade. pic.twitter.com/UOap0YqnhT
— Thayyib #Maldives (@thayyib) July 13, 2022
மாலத்தீவில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து கோட்டபய தனித்தீவு ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளாத தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை விமானப்படையினர் கோட்டபய ராஜபக்ச குடும்பத்தினரை பாதுகாப்பாக அழைத்துச்சென்று மாலத்தீவில் தரையிறக்கியது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion