(Source: ECI/ABP News/ABP Majha)
Srilanka Rain: இலங்கையில் வெளுத்துவாங்கும் மழை: 15 பேர் உயிரிழப்பு; ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
Sri Lanka Heavy Rain: இலங்கையில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பு உட்பட பல்வேறு பகுதிகளில் 300 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை வெள்ளம் பெய்ததில் 15 நபர் உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
இலங்கையில் மிக கனமழை:
இலங்கையில் கடந்த சில தினங்களாக பருவமழை பெய்து வருகிறது. பருவமழையானது மிகவும் கடுமையாக பெய்ததால், பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் பலத்த காற்று மற்றும் மின்னல்களுடன் பெய்த மழையில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்படுத்தியதாக இலங்கை பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.
15 பேர் உயிரிழப்பு:
பருவமழையானது, இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தியதில், வார இறுதியில் குறைந்தது 15 பேர் இறந்திருப்பதாகவும் மற்றும் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 19,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்ற்ன.
தலைநகர் கொழும்பு உட்பட ஏழு மாவட்டங்களில் 300 மில்லி மீட்டருக்கும் அதிகமான அடைமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன, பலத்த காற்றோடு மற்றும் மின்னலுடன் கடுமையான மழை பெய்ததாக தகவல் தெரிவிக்கின்றன.
மீட்பு பணிகள் தீவிரம்:
சுமார் 25 மாவட்டங்கள் மழையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் மீட்புப் பணிகளுக்காக படகுகள் மூலம் இலங்கை இராணுவம் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி அவசர நடவடிக்கைக்காக விமானப்படையானது, மூன்று ஹெலிகாப்டர்களை தயார் நிலையில் வைத்து இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
வானிலை மையம் :
தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
04.06.2024: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்தியமேற்கு வங்கக்கடலின் தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.