Srilanka Economic Crisis: இலங்கைக்கு 7500 கோடி ரூபாய் கடனுதவி வழங்கிய இந்தியா..
பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கை அரசிற்கு இந்திய அரசு கடனுதவி வழங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களாக இலங்கை பெரும் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது. இதன்காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. உணாவு பொருட்கள் தொடங்கி பல பொருட்களுக்கு விலை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இலங்கை அரசு பல்வேறு நாடுகளுடன் நிதியுதவி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை அணிக்கு உதவும் வகையில் இந்திய அரசு 7500 கோடி ரூபாய் கடன் உதவியை அளித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க இந்த தொகை பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Neighborhood first. India stands with Sri Lanka.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) March 17, 2022
US$ 1 billion credit line signed for supply of essential commodities.
Key element of the package of support extended by India. pic.twitter.com/Fbzu5WFE3n
இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்சே உடன் இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் சந்தித்து பேசினர். அதன்பின்னர் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கொள்கை மூலமாக இலங்கைக்கு இந்தியா கடன் உதவி வழங்கியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பேருந்துகள் உள்ளிட்ட வாகன போக்குவரத்து கட்டணங்கள் அங்கு அதிகரித்துள்ளன. இதன் காரணமாக , பொதுமக்கள் குறைந்த கட்டணம் கொண்ட ரயில் போக்குவரத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் கூட்டம் அலை மோதுகிறது. இதன் காரணமாக , ரயில் சேவையை அதிகரிக்க, ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் சங்க செயலாளர் சுமன் சாமர, இலங்கையின் போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதில் ரயில் சேவையை விரிவுபடுத்தி, மக்கள் பயணத்திற்கு தேவையான வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் எனக் குறிபிடப்பட்டிருந்தது.
மேலும் படிக்க:‛சமாளிக்க முடியல... ஏதாவது பண்ணுங்க...’ இலங்கை போக்குவரத்து அமைச்சருக்கு ஸ்டேஷன் மாஸ்டர்கள் கோரிக்கை!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்