Gotabaya leave Singapore: மாலத்தீவில் எதிர்ப்பு: சிங்கப்பூருக்கு பறந்த கோட்டபய ராஜபக்ச?
மாலத்தீவிலும் கோட்டபய ராஜபக்சவுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், சிங்கப்பூருக்கு தப்பித்துச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோட்டபய ராஜபக்ச இன்று காலை மாலத்தீவிற்கு தப்பிச் சென்றதாக கூறப்பட்டது. ஆனால் மாலத்தீவிலும் கோட்டபய ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவித்து , மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கோட்டபய ராஜபக்ச சிங்கப்பூருக்கு தப்பித்துச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sri Lankans in Maldives protest against ex-President Gotabaya Rajapaksa
— ANI Digital (@ani_digital) July 13, 2022
Read @ANI Story | https://t.co/ylDuYkljnU#SriLankanpoliticalcrisis #Maldives #SriLanka #protestInMaldives #GotabayaRajapaksa pic.twitter.com/0GUZLqQeDL
”பொதுமக்கள் ஆதரவு அளிக்கவும்”:
இலங்கையில் சட்டம் மற்றும் ஒழுங்கை காக்க ஆதரவளிக்குமாறு இலங்கை மக்களை ராணுவ தளபதி கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, அரசியல் தீர்வு காணும்படி, சபாநாயகரிடமும் இலங்கை ராணுவ தளபதி வலியுறுத்தியுள்ளார்.
#WATCH | Protestors enter the premises of Sri Lankan PM's office building in Colombo as the fury of the protests intensifies in the country pic.twitter.com/QkoGF6Pen8
— ANI (@ANI) July 13, 2022
தற்காலிக அதிபராக நியமித்ததால் குழப்பம்:
ரணிலை தற்காலிக அதிபராக கோட்டபய ராஜபக்ச நியமித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளதால் குழப்பம் நிலவி வருகிறது. அதிபர் வெளிநாடு சென்றுள்ளதால் தற்காலிக அதிபர் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தகவல் தெரிவித்துள்ளார்.
துபாய் பயணம் மாற்றம்:
இதற்கு முன், கோட்டபய ராஜபக்ச துபாய் செல்லவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது சிங்கப்பூருக்கு தப்பித்துச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
Former Sri Lankan Prez Rajapaksa to leave for Singapore from Maldives
— ANI Digital (@ani_digital) July 13, 2022
Read @ANI Story | https://t.co/LT1ICsZySu#SriLanka #SriLankaCrisis #SriLankaprotest #GotabayaRajapaksa pic.twitter.com/uwqxLT6YaC
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்