Watch video : காரை சரிசெய்ய 20 ஆயிரம் யூரோவா..? வெடிக்க வைத்து வெறியை தீர்த்த உரிமையாளர்!
தெற்கு பின்லாந்தில் 2013 டெஸ்லா மாடல் எஸ் ன் உரிமையாளர் ஒருவர் தனது காரை வெடிக்க வைத்து வீடியோ எடுத்த காட்சியை யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தெற்கு பின்லாந்தின் கீமென்லஸ்கோ பகுதியில் சில ஆயிரம் மக்கள் மட்டுமே வசிக்கும் ஜாலா என்ற அழகிய மற்றும் பனி மூடிய கிராமம் உள்ளது. 2013 டெஸ்லா மாடல் எஸ் ன் உரிமையாளர் தனது காரை வெடிக்க செய்துள்ளார்.
இந்த வீடியோவை பொம்மிஜட்காட் என்ற யூடியூப் சேனல் கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு வீடியோக்காட்சியையும் ஒரு சில தன்னார்வலர்களின் உதவியுடன் எடுத்து பதிவிட்டுள்ளனர். வீடியோவின் ஆரம்பகட்ட காட்சியில் ஒரு அழகிய பனிபடர்ந்த இடத்தை சுற்றி, அதில் ஒரு சாலையின் நடுவில் கார் ஓன்று நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த கார் வெடிக்க போவதாகவும் அதற்கான காரணத்தையும் அந்த காரின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
அவள் அளித்த விளக்கத்தில், நான் அந்த டெஸ்லாவை வாங்கியபோது, முதல் 1,500 கிமீ நன்றாக இருந்தது. அது ஒரு சிறந்த கார். பின்னர் தொடர்ந்து காரில் சில தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. எனவே எனது காரை சர்வீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றேன். ஏறக்குறைய ஒரு மாதமாக கார் ஒர்க்ஷாப்பில் இருந்தது, கடைசியாக எனது காருக்கு அவர்களால் எதுவும் செய்ய முடியாது எனவும், முழு பேட்டரி செல்லையும் மாற்றுவதே ஒரே வழி எனவும் தெரிவித்தனர்.
இந்த பேட்டரியை மாற்ற எவ்வளவு என்றும், இதற்கு உத்தரவாதம் அளிப்பீர்களா என்று கேட்டேன்.அதற்கு அவர்கள் கிட்டத்தட்ட 20,000 யூரோக்கள் செலவாகும். ஆனால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்று தெரிவித்தனர். என்னால் அவ்வளவு தொகை செலவிட முடியாது என்று கூறி, காரை மீண்டும் எடுத்து வந்துவிட்டேன். தற்போது இதை வெடிக்க செய்ய போகிறேன் என்றார்.
மேலும்,காரை வெடிக்க வைப்பது எளிதான காரியமல்ல. குண்டுவெடிப்பை ஒரு திசையில் செலுத்துவதற்காக காரின் ஒரு பக்கத்தில் டைனமைட்டின் குச்சிகள் பொருத்தப்பட்டு அந்த காரையும் வெடிக்க செய்துள்ளார்.
யூடியூபில் பதிவிடப்பட்ட வீடியோ சில மணிநேரங்களில் 2.23 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது. இந்த காரானது பல்வேறு கோணங்களில் வெடித்ததை, ஸ்லோ மோஷனிலும், உயர்தர காரின் எரிந்த பாகங்கள் தெரிகிறது.
குழுவினரும் உரிமையாளரும் குப்பைகளைச் சேகரித்து, அவற்றை ஒரு குவியலாகக் குவித்து "இனி எதுவும் இல்லை. முற்றிலும் அழிந்துவிட்டது," காரின் உரிமையாளர் கேடெய்னென் தெரிவித்துள்ளார், "நான் டெஸ்லாவை இந்த அளவுக்கு ரசித்ததில்லை! மேலும், டெஸ்லாவை வெடித்த உலகின் முதல் நபர் நானாக இருக்கலாம். தற்போது ஒரு புதிய வரலாறு உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்