US School Gunshot: அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச் சூடு.. 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு..
டென்னிசி, நாஷ்வில்லில் உள்ள ஒரு தனியார் கிறிஸ்தவ பள்ளியில் நேற்று ஒரு பெண் துப்பாக்கிச் சூடு நடத்தியத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
டென்னிசி, நாஷ்வில்லில் உள்ள ஒரு தனியார் கிறிஸ்தவ பள்ளியில் நேற்று ஒரு பெண் துப்பாக்கிச் சூடு நடத்தியத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
டென்னிசி, நாஷ்வில்லில் 6 ஆம் வகுப்பு வரை இருக்கும் தி கோவனன்ட் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று காலை 10 மணியளவில் பயங்கர துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டை பெண் ஒருவர் நடத்தியுள்ளார். பள்ளியின் இரண்டாவது மாடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் மற்றும் 3 ஆசிரியர்கள் காயமடைந்தனர். தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய பெண்ணை காவல் துறையினர் சுட்டுக்கொன்றனர்.
காயமடைந்தவர்களை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 3 குழந்தைகள் உட்பட 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி மெட்ரோபொலிட்டன் நாஷ்வில்லி காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் டான் ஆரோன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பள்ளியிலிருந்து தகவல் தெரிவிக்கும் போது பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தும் சத்தம் வருவதை அதிகாரிகள் கேட்டதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்திய இளம் வயது பெண்ணிடம் semi-automatic rifles மற்றும் handgun இருந்தது என அதிகாரிகள் கூறியதாகவும் குறிப்பிட்டார். மேலும் ஐந்து பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் அந்த பெண்ணை சுட்டுக்கொன்றதாக கூறினார். ஆனால் அந்த பெண்ணை பற்றிய தகவல் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
In a tragic morning, Nashville joined the dreaded, long list of communities to experience a school shooting.
— Mayor John Cooper (@JohnCooper4Nash) March 27, 2023
My heart goes out to the families of the victims. Our entire city stands with you.
As facts continue to emerge, I thank our first responders and medical professionals.
நாஷ்வில் மேயர் ஜான் கூப்பர் தனது டிவிட்டர் பக்கத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு கலாச்சாரம் வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. ஆனால் பெண் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஈடுவப்டுவது என்பது அறிதானது. 1966 ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்ட 191 துப்பாக்கிச்சுடு சம்பவத்தில் இதுவரை 4 பெண்கள் மட்டுமே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடத்தியுள்ளனர் என தி வயலன்ஸ் ப்ராஜெக்ட் பட்டியலிட்டுள்ளது. ஆராய்ச்சியாளர் டேவிட் ரைட்மேன் நிறுவிய இணையதளமான K-12 ஸ்கூல் ஷூட்டிங் டேட்டாபேஸின் படி, 2023 ஆம் ஆண்டில் இதுவரை 89 பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பள்ளிகளில் 303 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன, வரலாற்றில் இதுவே அதிகம் என கூறப்பட்டுள்ளது.