National Sister's Day 2022: அமெரிக்காவில், தேசிய சகோதரிகள் தினம் இன்று கொண்டாடப்பட்டது.. ஏன், என்ன வரலாறு?
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை தேசிய சகோதரி தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தேசிய சகோதரி தினம் ஆகஸ்ட் 7ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்தியா முழுவதும் இன்று (ஆகஸ்ட் 7) தேசிய சகோதரிகளே தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
ஒற்றுமையை போற்றும் நாள்
வேற்றுமையில் ஒற்றுமை என்னும் தாரக மந்திரம் இந்தியாவை வழிநடத்தும் கூற்றாக எப்போதும் இருந்துள்ளது. பெரும்பாலும் இந்தியாவின் விழாக்கள், பண்டிகைகள் ஒற்றுமை சார்ந்ததாகவே இருக்கும். அதிலும் ஒற்றுமையையே உருவாக கொண்ட தினம் தான் சகோதரிகள் தினம். எல்லோரும் விட்டு செல்லும் நேரத்திலும் நம் கைகளை பிடித்திருப்பவர் நம் சகோதரி தான். அந்த சகோதரிக்காக இந்த தினத்தை செலவு செய்வது ஆரோக்யமான விஷயம் அல்லவா…
சகோதரிகள் தினம்
சகோதரிகளே எல்லோருக்கும் சிறந்த நண்பர்கள் ஆகின்றனர். அவர்கள் நம்மோடு எவ்வளவு சண்டை இடுகிறார்களோ, அவ்வளவு பாசமும் வைத்திருப்பார்கள். எல்லா நேரங்களிலும் நீங்கள் சொல்லும் கருத்துக்கு உடன்படவில்லை என்றாலும், நீங்கள் செய்வதை குறை சொல்லி வந்தாலும், தேவைப்படும் நேரத்தில் கண்டிப்பாக உங்களுக்காக உலகையே வீழ்த்தும் அளவுக்கு பாசம் வைத்திருப்பார்கள்.
இந்த ஆண்டு சகோதரிகள் தினம்
சகோதரிகளுக்கு இடையேயான சிறப்புப் பிணைப்பைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை தேசிய சகோதரி தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தேசிய சகோதரி தினம் ஆகஸ்ட் 7ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நம் சகோதரத்துவத்தை போற்றுவதற்காகவே இந்த தினம் அனுசரிக்கப்படுகுறது. இந்த நாளில் தங்களது சவோதரிகளுக்கு பரிசுகள் வழங்குவதோடு மட்டும் இல்லாமல், அவர்களோடு அமர்ந்து பேசலாம். நமது நேரமும், பகிர்தலுமே நம் உறவுக்கான ஆதாரம் என்பதையே இந்த தினம் உணர்த்துகிறது.
வரலாறு
சகோதரிகள் தினத்தின் வரலாறு 1996 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள மெம்பிஸில் வசிக்கும் டிரிசியா எலியோகிராம் என்பவர் தனது சகோதரிகளில் ஒருவருடன் இந்த யோசனையை முதலில் கொண்டு வந்தார். இந்த நாளுக்குப் பின்னால் உள்ள அவரது நோக்கம், மக்கள் சகோதரத்துவத்தை மதிக்கச் செய்வதுடன், அவர்கள் பகிர்ந்து கொள்ளும் அன்பையும் இரக்கத்தையும் பரப்புவதாகும். சகோதரிகள் உள்ளவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இல்லையென்றாலும், நாம் ரத்த பந்தத்தில் மட்டுமே சகோதரிகளை கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. மனதளவில் சகோதரியாக ஏற்றுக்கொண்டவர்கள் எல்லோரும் சகோதரிகளே.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்