Singapore Coronavirus: மாஸ்க் இனி கட்டாயமாம்..! சிங்கப்பூரில் ஒரு வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு..
சிங்கப்பூரின் சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த மே 5 முதல் 11 வரையிலான வாரத்தில் சுமார் 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் வேகமாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், உலகின் பிற நாடுகளிலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரில் தற்போது கொரோனா புதிய அலை பரவி வருகிறது. கடந்த மே 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை சுமார் 25,900 க்கு மேற்பட்டோர் இந்த புதிய கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக, நேற்று (மே 18ம் தேதி) முதல் சிங்கப்பூர் முழுவதும் மீண்டும் முக கவசம் அணியுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யே குங் அறிவுறுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் நாளென்றுக்கு சுமார் 181 பேரிலிருந்து 250க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருவதால், பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ஓங், “நாங்கள் கொரோனா அலையின் ஆரம்ப பகுதியில் இருக்கிறோம். இது நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு புதிய அலையின் தொடக்கத்தை நாங்கள் காண்கிறோம். இருப்பினும், இது அதிகரித்துகொண்டே வருகிறது. அடுத்த இரண்டு அல்லது நான்கு வாரங்களில் கொரோனா அதனது உச்சத்தை எட்டும். ஜூன் மாதத்தின் நடுப்பகுதி அல்லது இறுதிக்குள் சிங்கப்பூரில் கொரோனா முடிவிக்கு கொண்டு வரப்படும்” என தெரிவித்தார்.
தினமும் 250 பேருக்கு கொரோனா தொற்று:
சிங்கப்பூரின் சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த மே 5 முதல் 11 வரையிலான வாரத்தில் சுமார் 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய வாரத்தில் 13,700 பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது, ஒரு வாரத்திற்கு முன்பு நாள் ஒன்றுக்கு 181 ஆக இருந்த சராசரி, இப்போது கிட்டத்தட்ட 250 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், படுக்கை வசதியை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவசர தேவை மற்றும் அறுவை சிகிச்சை நோயாளிகளை தவிர, பிற நோயாளிகளின் வருகையை குறைக்கவும், லேசான நோய்வாய்ப்பட்ட நபரை வீட்டிலேயே கவனித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடிய நபர்கள் மற்றும் முதியவர்கள் உட்பட தீவிர நோய் அபாயத்தில் உள்ளவர்கள் விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
உலகளவில் முக்கிய கொரோனா மாறுபாடுகள் இன்னும் JN1, KP1 மற்றும் KP2 உள்ளிட்ட வகைகள் உள்ளது. தற்போது, சிங்கப்பூரில் மூன்றில் இரண்டு பங்கு கொரோனா பாதிப்புகள் இந்த வகைகளாக உள்ளன. எவ்வாறாயினும், தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் வைரஸ் மாறுபாடுகளுக்கு எதிராக தங்களைத் தற்காத்துக் கொள்ள தடுப்பூசிகளை எடுத்துகொள்ளுமாறும், தங்களை பாதுகாத்து கொள்ளுமாறும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது அரசாங்கம். சிங்கப்பூரில் உள்ள உள்ளூர் மக்களில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் ஆரம்பம் மற்றும் கூடுதல் நிலை மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனர்.