வரி மோசடியில் சிக்கிய பாப் சிங்கர் ஷகிரா... 8 ஆண்டு கால சிறை தண்டனை?
வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு தொடர்பான மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, பாப் சிங்கரான ஷகிராவுக்கு எட்டு ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய இசைத் துறையில் புகழ்பெற்ற பாடகராக ஷகிரா திகழ்கிறார். வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு தொடர்பான மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, பாப் சிங்கரான ஷகிராவுக்கு எட்டு ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை, ஸ்பெயின் நாட்டின் வழக்கறிஞர்கள் வெள்ளிக்கிழமை அன்று உறுதி செய்துள்ளனர்.
பார்சிலோனாவில் உள்ள வழக்கறிஞர்கள் 45 வயது பாப் பாடகியிடம் இருந்து கிட்டத்தட்ட 24 மில்லியன் யூரோக்கள் ($24.5 மில்லியன்) அபராதம் கோரவுள்ளார்கள். 2012 மற்றும் 2014க்கு இடையில், சம்பாதித்த வருமானத்தில் 14.5 மில்லியன் யூரோக்களை ஸ்பெயின் வரி அலுவலகத்தில் மோசடி செய்ததாக ஷகிராவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
60 மில்லியனுக்கும் அதிகமான ஆல்பங்களை விற்றுள்ளார் ஷகிரா. இது தொடர்பான ஒப்பந்தம் குறித்து தாக்கல் செய்த மனுவை அவர் ஏற்று கொள்ள மறுத்துள்ளார். தனது வழக்கறிஞர்கள் மூலம் தாக்கல் செய்த எதிர் மனுவில், தன் குற்றமற்றவர் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். தான் குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்படும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நீதிமன்றத்தில் இன்னும் முறையாக மனு தாக்கல் செய்யப்படவில்லை. வழக்கின் விசாரணை தொடங்கும் வரை ஒப்பந்தம் சாத்தியமாக வாய்ப்புள்ளது என ஷகிராவின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்.
பார்சிலோனா அணியின் டிஃபென்டரான ஜெரார்ட் பிக்கை காதலிக்க தொடங்கியதை அடுத்து, 2011 இல் ஷகிரா ஸ்பெயினுக்கு குடிபெயர்ந்தார். ஆனால் 2015 வரை பஹாமாஸில் அவர் வரி செலுத்தி வந்ததாக வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிறகு, இந்த ஜோடி ஜூன் மாதம் பிரிந்துவிட்டதாக அறிவித்தது.
தனது உரிமைகள் முழுமையாக மீறப்பட்டதாகவும் எதிர் தரப்பு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் ஷகிரா கடுமையாக சாடினார். இதுகுறித்து அவர் கூறுகையில், "உலகின் பல்வேறு நாடுகளில் பாடி, அமெரிக்காவில் 'தி வாய்ஸ்' நிகழ்ச்சியில் நீதிபதியாக இருந்து சம்பாதித்த பணத்தை எதிர் தரப்பு கேட்கிறது. ஸ்பெயினில் வசிக்கவில்லை. 2013 மற்றும் 2014 க்கு இடையில் பாடல் போட்டி நிகழ்ச்சியில் ஷகிரா கலந்து கொண்டுள்ளார்" என்றார்.
2014 ஆம் ஆண்டு வரை அவர் தனது பெரும்பாலான பணத்தை சர்வதேச சுற்றுப்பயணங்களில் இருந்து சம்பாதித்ததாகவும், 2015ஆம் ஆண்டுக்கு பிறகே ஸ்பெயினில் முழு நேரமாக வசிக்க தொடங்கியதாகவும் அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்