மேலும் அறிய

40 டிகிரி சாய்வாக சுழலும் கருந்துளை கண்டுபிடிப்பு… உலக விஞ்ஞானிகளை வியக்கவைக்கும் ஸ்பெயின்!

சுற்றுப்பாதை அச்சுக்கும் கருந்துளையின் சுழற்சிக்கும் இடையே 40 டிகிரிக்கும் அதிகமான வித்தியாசம் இருக்கிறது. இது இவ்வளவு அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கவில்லை.

வான் அறிவியலுக்கென பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட கருவியை பயன்படுத்தி விஞ்ஞானிகள் பைனரி ஸ்டார் சிஸ்டம் MAXI J1820+070 -ல் அதிகபட்ச சாத்திய விகிதத்தில் சாய்ந்து சுழலும், கருந்துளை எனப்படும் பிளாக்ஹோலை கண்டுபிடித்துள்ளனர். கருந்துளை(BLACK HOLE) என்பது மிகபெரிய அண்ட வெளியில் மற்றும் வின்வெளியில்  காணப்படும்  சக்தி வாய்ந்த கண்ணுக்கு தெரியாத  வெற்றிடமாகும்.  இந்த கருந்துளை  அதிக ஈர்ப்பு விசை கொண்டது எந்த அளவுக்கு என்றால்  இதனை கடந்து செல்லும் எந்த ஒரு ஒளியாக இருந்தாலும் அதைகூட தனக்குள் ஈர்த்துக் கொள்ளும் அளவிற்கு சக்தி வாய்ந்தது.

இது ஒரு சூரியனையே தனக்குள் ஈர்த்து கொள்ளும்  அளவிற்கு சக்தி வாய்ந்தது.  இந்த கருந்துளையானது அதனுள் சென்ற   சிறிய ஒளியை கூட வெளிய வர விடாது அந்த அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்தது. நமது பால்வெளியின் அருகில் உள்ள ஒரு கருந்துளை நமது சூரியனை விட 40 லட்ச  மடங்கு பெரியதாக இருக்கும் என கூறப்படுகிறது.  இந்த கருந்துளை ஒவ்வொரு பால்வெளி அண்டத்திலும் காணப்படும். இந்த கருந்துளை பற்றிய அனைத்து கருத்துகளும் அதனை சுற்றியுள்ள பொருள்களை வைத்தே வரையறுக்கப்படுகிறது. ஏனெனில் இதுவரை கருந்துளைக்குள் எவரும் சென்றதில்லை. 

40 டிகிரி சாய்வாக சுழலும் கருந்துளை கண்டுபிடிப்பு… உலக விஞ்ஞானிகளை வியக்கவைக்கும் ஸ்பெயின்!

கருந்துளை ஒளியை கூட வெளியேற விடாமல் ஈர்த்துக் கொள்ளும் சக்தி படைத்ததால், அதனை நம்மால் பார்க்க இயலாது. ஆனால், விண்வெளியில் உள்ள தொலைநோக்கி மூலம் கருந்துளை எங்கு இருக்கிறது என்பதை அறியலாம். ஸ்பெயினின் வானியல் ஆராய்ச்சியாளர்கள் குழுவின் சமீபத்தில் புதிய கருந்துளை ஒன்று சுழல்வதைக் கண்டறிந்துள்ளது. இந்த குழு தங்களது கண்டுபிடிப்பை 'சயின்ஸ்' இதழில் வெளியிட்டது. ஃப்ரீபர்க் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் பேராசிரியரும், லீப்னிஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் சோலார் பிசிக்ஸ் (KIS) இயக்குநரும் ஆன டாக்டர் ஸ்வெட்லானா பெர்டியுகினா, சர்வதேச வானியல் ஆராய்ச்சியாளர்கள் குழுவுடன் இணைந்து, அதிவேகத்தில் சுழலும் கருந்துளையின் வேகத்தை முதன்முறையாக அளந்துள்ளார். அதிலும் இதன் தனித்துவம் என்னவென்றால், இம்முறை இவர் அளந்திருப்பது நம்பகத்தன்மை மிகுந்ததாகவும் ஆதாரபூர்வமாகவும் உறுதிசெய்துள்ளார். MAXI J1820+070 என பெயரிடப்பட்ட இந்த கருந்துளை பைனரி நட்சத்திர அமைப்பின் சுற்றுப்பாதையில் இந்த கருந்துளை கண்டறியப்பட்டுள்ளது. கருந்துளையின் சுழற்சி அச்சு நட்சத்திரத்தின் சுற்றுப்பாதையின் அச்சைப் பொறுத்து 40 டிகிரிக்கு மேல் சாய்ந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

40 டிகிரி சாய்வாக சுழலும் கருந்துளை கண்டுபிடிப்பு… உலக விஞ்ஞானிகளை வியக்கவைக்கும் ஸ்பெயின்!

"இந்த கண்டுபிடிப்பு கருந்துளை உருவாக்கத்தின் தற்போதைய கோட்பாட்டு மாதிரிகளுக்கே சவால் அளிக்கிறது. சுற்றுப்பாதை அச்சுக்கும் கருந்துளையின் சுழற்சிக்கும் இடையே 40 டிகிரிக்கும் அதிகமான வித்தியாசம் இருக்கிறது. இது இவ்வளவு அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கவில்லை. கருந்துளையைச் சுற்றி ஒரு வளைந்த சுற்றுவட்டம் ஏற்படும்போது இந்த 40 டிகிரி வேறுபாடு என்பது மிகவும் சிறியது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இனி இதனை விடவும் பெரிய அளவிலான கருந்துளைகள் எதிர்காலத்தில் நிறைய கண்டுபிடிக்கப்படலாம். எங்கள் துருவமானி ஆனது, அதாவது துருவ முனைகளை அளவிடும் கருவி ஆனது, 1 மில்லியன் தூரத்திற்கு மேல் உள்ள ஆப்டிகல் துருவமுனைப்பையும் துல்லியத்துடன் அளவிடும் திறன் கொண்டது. இந்த கருவியின் மூலம் புதிய பல விஷயங்களை கண்டுபிடிப்பதற்கு வழிவகுக்கும்." என்று பெர்டியுகினா விளக்கினார். பைனரி நட்சத்திர அமைப்புகளில் உள்ள கருந்துளைகள் பிரபஞ்ச பேரழிவால் உருவாக்கப்பட்டது. இது அந்த ​​அமைப்பின் ஈர்ப்பு மையத்தைச் சுற்றி வரும். இந்த கருந்துளை அருகிலுள்ள, இலகுவான துணை நட்சத்திரத்திலிருந்து எவ்வாறு பொருளை இழுக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget