மேலும் அறிய

Saudi Arabia: விவாகரத்து தரலன்னா நிர்வாணமா ரோட்ல போவேன்.. ஷாக் கொடுத்த மனைவி! அரண்டு போன கணவன்!

வேறு வழியின்றி கணவன், மனைவி விவாகரத்துக்கு வற்புறுத்தியதை அடுத்து, அவரது கோரிக்கையை நிறைவேற்றி உள்ளார்.

சவூதி அரேபியாவில் பெண் ஒருவர், தனக்கு விவாகரத்து வழங்கவில்லை என்றால், நிர்வாணமாக வெளியே செல்வேன் என்று கணவனை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் வேறு வழியின்றி கணவன், மனைவி விவாகரத்துக்கு வற்புறுத்தியதை அடுத்து, அவரது கோரிக்கையை நிறைவேற்றி உள்ளார். அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், நிர்வாணமாக நடமாடுவேன் என்று மனைவி மிரட்டியதாக, கல்ஃப் செய்தித் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

விவாகரத்து தனது விருப்பத்திற்கு எதிரானது என்பதால் அதை ரத்து செய்யக் கோரி அந்த நபர் தற்போது ஷரியா நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இருப்பினும் விவாகரத்துக்கான காரணம் ஷரியாவுக்கு முன்பே அவர் தரப்பில் உறுதிசெய்யப்பட்டதால், அவரது வழக்கை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சவூதி அரேபியாவில் விவாகரத்து விகிதங்களில் ஒரு பெரிய உச்சம் காணப்படுகிறது, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஏழு விவாகரத்து வழக்குகள் பதிவாகியுள்ளன என்று அந்த நாட்டின் புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் விவாகரத்து வழக்குகள் வியக்கத்தக்க வகையில் 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் ஒருவர் மனைவி தினமும் குளிக்காததால் அவரிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார்.

தனது திருமணத்தை காப்பாற்றும் முயற்சியில், மனைவி பெண்கள் பாதுகாப்பு பிரிவில் புகார் அளித்ததை அடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாக  தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பெண் குவார்சி கிராமத்தைச் சேர்ந்தவர், அந்த நபர் சந்தாஸ் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு வயதில் குழந்தை ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது.

திருமணத்தை தொடரவும், அவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவும் அந்த பெண் விருப்பம் தெரிவித்திருந்தார். இருப்பினும், கணவர் மீண்டும் மீண்டும் உறுதியாக அந்த பெண்ணுடன் உறவுகளை முடிக்க விரும்பினார். மனைவி தினமும் குளிக்காததால், அவரிடம் இருந்து விவாகரத்து பெற உதவுமாறு அதிகாரிகளிடம் விண்ணப்பம் கொடுத்துள்ளார்.

அந்த நபர், தனது மனுவில், தனது மனைவியைக் குளிக்கச் சொன்ன பிறகு, தினமும் அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்படுவதாக பெண்கள் பாதுகாப்புப் பிரிவிடம் கூறியிருந்தார். அண்மையில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர், தன் மனைவி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அவரை விவகாரத்து செய்ய அந்த மாநிலத்தின் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதற்கு அவர் கூறிய காரணங்கள் பரபரப்பை ஏற்படுத்தின.‛என் மனைவி, இரவு நேரம் எனக்கு தெரியாமல், வேறோரு ஆணுடன் தொலைபேசியில் பேசுகிறார். அவர்களின் பேச்சு மிக ஆபாசமாக உள்ளது. தற்செயலாக அதை நான் கேட்க நேர்ந்த நிலையில், இது தொடர்பாக என் மனைவியிடம் விளக்கம் கேட்டேன்; முறையான பதில் இல்லை. இது தவறு என பலமுறை எச்சரித்தேன். ஆனாலும் அவர் நிறுத்தவில்லை.  தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். அத்தோடு இல்லாமல், ‛உங்களை விட, அவர் தான் எனக்கு மனதளவிலும், உடலளவிலும் நெருக்கமானவர்’ என்று என்னிடம் கூறுகிறார். அவருடைய நடத்தையில் எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே இனி அவருடன் வாழ விரும்பவில்லை. அவரிடமிருந்து எனக்கு விவகாரத்து வேண்டும்,’ என்று அந்த மனுவில் சம்மந்தப்பட்ட நபர் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த மனுவை, குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த அந்த நபர், வழக்கை கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த வழக்கில் கருத்து கூறிய நீதிமன்றம் ‛வேறொருவருடன் பேசுவதை வைத்து ஒரு பெண்ணின் நடத்தை மீது சந்தேகம் கொள்ள முடியாது. அதற்காக அவரை மோசமானவர் என்று முடிவுக்கு வந்துவிட முடியாது. அப்படி உறுதி செய்யவும் முடியாது. இந்த வழக்கை பொறுத்தவரை, தன் மனைவி, வேறு ஒரு ஆணுடன் நெருக்கமாக இருந்ததை மனுதாரர் நேரில் பார்க்கவில்லை. பார்த்ததற்கான ஆதாரமும் இல்லை. ஆனால், கணவர் பல முறை எச்சரித்துள்ளார். '

அவர் எச்சரித்த பிறகும், இரவில் வேறு ஒரு ஆணுடன் போனில் ரகசியமாக மனைவி பேசுவது நல்ல பண்பு அல்ல. அது திருமண வாழ்க்கையை சீரழிக்கும். தொடர்ந்து அது நல்ல வாழ்க்கைக்கு உதவாது. மனுதாரரும் அவரது மனைவியும், இதற்கு முன் பல்வேறு காரணங்களுக்காக இரு முறை பிரிந்து, மீண்டும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். இனி மீண்டும் அவர்களை சேர்த்து வைத்தால், அவர்களின் வாழ்க்கை நிம்மதியாக இருக்காது. எனவே மனுதாரர் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு விவாகரத்து வழங்குகிறேன்,’ என்று நீதிபதி உத்தரவிட்டார். 

மனைவி வேறொரு நபருடன் பேசுவதை எதிர்த்து குடும்பநல நீதிமன்றத்திற்குச் சென்று, அங்கு நீதி கிடைக்காமல் உயர்நீதிமன்றதை அணுகி விவகாரத்து பெற்ற கணவரின் செயலும், நீதிபதியின் கருத்தும், கேரளாவில் பேசும் பொருளாக மாறியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget