மேலும் அறிய

Crude Oil Price Cut: கச்சா எண்ணெய் விலையை குறைத்த சவுதி அரேபியா; பெட்ரோல், டீசல் விலை குறையுமா.? நிலவரம் என்ன.?

ஆசிய நாடுகளுக்கு விற்பனை செய்யும் கச்சா எண்ணெயின் விலையை குறைத்துள்ளது சவுதி அரேபியா. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் புழக்கம் அதிகரித்துள்ளதால், வேறு வழியின்றி தாங்கள் ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெயின் விலையை குறைத்துள்ளது சவுதி அரேபியா. இதனால், நமது நாட்டில் பெட்ரோல், டீசலின் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விலை குறைப்புக்கு காரணம் என்ன.? பார்க்கலாம்.

கச்சா எண்ணெய் விலையை குறைத்த சவுதி அரேபியா

மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியா, கச்சா எண்ணெய் வளம் அதிகம் உள்ள நாடு. அந்த நாட்டின் பொருளாதாரமே கச்சா எண்ணெய் வர்த்தகத்தை சார்ந்தே இருக்கிறது. இந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு தாங்கள் ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெயின் விலையை குறைத்துள்ளது சவுதி அரேபியா.

அதன்படி, பேரல் ஒன்றிற்கு 30 சென்ட்டுகள் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதாவது, டாலர் மதிப்பில் இது 0.3 அமெரிக்க டாலர்களாகும். அது, இந்திய மதிப்பில் சுமார் 27 ரூபாயாகும். கடந்த 5 ஆண்டுகளில், ஒரே நேரத்தில் இத்தகைய விலை குறைப்பை சவுதி அரேபியா செய்வது இதுவே முதல் முறையாகும்.

எதனால் இந்த விலை குறைப்பு.?

சவதி அரேபியாவின் இந்த விலை குறைப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் அதிக அளவில் கிடைப்பதை காட்டுகிறது. ஆசிய நாடுகளுக்கே அதிக அளவில் கச்சா எண்ணெயை விற்பனை செய்து வருகிறது சவுதி அரேபியா.

ஏற்கனவே, சவுதி அரேபியாவிடம் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்துவரும் இந்தியா, ரஷ்யாவிடம் இருந்தும் அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இந்நிலையில், கச்சா எண்ணெய் வளம் அதிகம் கொண்ட வெனிசுலாவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததோடு, அங்குள்ள கச்சா எண்ணெயை விற்பனையையும் தனதாக்கியுள்ளது.

மேலும், இந்தியா ரஷ்யாவை விடுத்து, தங்களிடமே கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா வற்பறுத்தி வருகிறது. இதனால், தங்கள் நாட்டின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், சவுதி அரேபியா தற்போது கச்சா எண்ணெயின் விலையை குறைத்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படுமா.?

ஆசியாவை பொறுத்தவரை, ஒவ்வொரு மாதமும் கச்சா எண்ணெயின் விலையை நிர்ணயம் செய்யும் முக்கிய நாடாக சவுதி அரேபியா உள்ளது. அந்நாட்டு விலையின் அடிப்படையில் தான், மற்ற நாடுகள் தங்கள் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்நிலையில், சவுதி அரேபியா தற்போது கச்சா எண்ணெயின் விலையை குறைத்துள்ளதால், மற்ற நாடுகளும் குறைக்க வாய்ப்புள்ளது. இதனால், இந்தியா தற்போது இறக்குமதி செய்துவரும் கச்சா எண்ணெயின் விலை குறையும். அதனால், இங்கு பெட்ரோல், டீசல் ஆகிவற்றின் விலையும் குறையுமா என்ன எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அப்படி நடந்தால் நன்றாகத் தான் இருக்கும்.!

 

 

தலைப்பு செய்திகள்

Trump on Crude Oil Price: அடிச்சாருயா அந்தர் பல்டி.! “கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் காரணமில்ல.!“ ட்ரம்ப் கூறியது என்ன.?
அடிச்சாருயா அந்தர் பல்டி.! “கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் காரணமில்ல.!“ ட்ரம்ப் கூறியது என்ன.?
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Plague Scare In Russia: பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget