Russia Ukraine War: வன்முறையை உடனே நிறுத்துங்கள்- ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, வன்முறையை உடனடியாக நிறுத்தி, பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, வன்முறையை உடனடியாக நிறுத்தி, பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று அறிவித்தார். அவரின் அறிவிப்பைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகர் மீது, மற்ற சில பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் ஏராளமான சேதம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து வருகிறது.
இந்தநிலையில், உக்ரைன் நடத்திய பாதுகாப்பு தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
வியாழன் அன்று நடந்த தாக்குதலில் இருந்து ரஷ்யப் படைகள் மீது அதன் ஆயுதப் படைகள் சுமார் 800 பேர் பலியாகியுள்ளதாக உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. கொல்லப்பட்ட வீரர்களின் எண்ணிக்கையை அமைச்சகம் குறிப்பிடுகிறதா என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை. உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, 30 க்கும் மேற்பட்ட ரஷ்ய டாங்கிகள், ஏழு ரஷ்ய விமானங்கள் மற்றும் ஆறு ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, வன்முறையை உடனடியாக நிறுத்தி, பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
மேலும் உக்ரைனில் இருந்து இந்தியக் குடிமக்களை உச்சபட்ச முக்கியத்துவம் கொடுத்து வெளியேற அனுமதிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''அனைத்துத் தரப்பில் இருந்தும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். ரஷ்யா மற்றும் நேட்டோ இடையிலான முரண்பாடுகளை நேர்மையான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும்.
இந்த விவகாரத்தில் தலைவர்கள் தங்கள் அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரக் குழுக்கள் மூலம் பிரச்சினைகளைத் தொடர்ந்து பேசித் தீர்ப்பதாக ஒப்புக்கொண்டனர்'' என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''தற்போது உக்ரைனில் இருக்கும் இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உதவுமாறு பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடினிடம் கேட்டுக்கொண்டார். தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று புடின் தெரிவித்ததை அடுத்து, பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.