மேலும் அறிய

Luna 25 Vs Chandrayaan 3: சந்திரயான் 3-க்கு டஃப் கொடுக்கும் லூனா 25.. நிலவின் நீள்வட்டப்பாதையில் பயணிக்கும் இருநாட்டு விண்கலம்..

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய ரஷ்யாவின் லூனா 25 விண்ணில் செலுத்தப்பட்டது. ஆகஸ்ட் 21 ஆம் தெதி நிலவில் தரையிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் 3: 

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் இஸ்ரோ தரப்பில் விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், இன்று முக்கியமான கட்டத்தை கடக்க உள்ளது. அதாவது சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து, லேண்டர் கருவியான விக்ரம் இன்று தனியாக பிரிக்கப்படுகிறது. சரியாக ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கி ஆய்வு பணிகளை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லூனா 25 விண்கலம்:

இது ஒருபுறம் இருக்க சந்திரயானுக்கு போட்டியாக ரஷ்யா, லூனா 25 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ஆகஸ்ட் 11-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. நிலவில் இருக்கும் நீர்த்தேக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக லூனா 25 செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. மாஸ்கோவிற்கு கிழக்கே 3,450 மைல்கள் (5,550 கிமீ) தொலைவில் அமைந்துள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து சோயுஸ் 2.1 வி ராக்கெட் லூனா-25 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. கடந்த 1976 ஆம் ஆண்டு ரஷ்யா, நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக  லூனா 24 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அதற்கு பின் 47 ஆண்டுகள் கடந்து லூனா 25 ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது.

லூனா-25, தோராயமாக சிறிய காரின் அளவு இருக்கும், சந்திரனின் தென் துருவத்தில் ஒரு வருட காலம் வரை செயல்படுவதை நோக்கமாக கொண்டுள்ளது. தென் துருவத்தில் நாசா மற்றும் பிற விண்வெளி நிறுவனங்களின் விஞ்ஞானிகள் சமீபத்திய ஆண்டுகளில் இப்பகுதியின் நிழல் பள்ளங்களில் நீர் பனியின் தடயங்களைக் கண்டறிந்துள்ளனர். இதனை ஆய்வு செய்யவே லூனா 25 அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், லூனா 25 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் நிழைந்துள்ளது. நிலவின் நீள்வட்டப்பாதையில் சுற்றும் லூனா 25 படிப்படியாக அதன் சுற்றுப்பாதை தூரத்தை குறைத்து, வரும் 21 – 23 ஆம் தேதிக்குள் நிலவில் தரையிறங்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

சந்திரயான் 3 vs லூனா 25: 

லூனா 25 கதிரியக்க ஜெனரேட்டரால் இயக்கப்படுகிறது, இது நீண்ட நேரம் செயல்பட உதவும். பூமியிலிருந்து சந்திரனுக்கான பயணம் சுமார் 10 நாட்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவின் சந்திரயான் 3 மற்றும் ரஷ்யாவின் லூனா 25 இரண்டுமே நிலவி  தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள நிலை, இரண்டு நாடுக்கும் இடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. ஆனால் அப்படி எதுவும் இல்லை என இஸ்ரோ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் -3, லேண்டர் விக்ரம் மற்றும் ரோவர் பிரக்யான் இரண்டையும் சுமந்து செல்கிறது. அதே நேரத்தில் ரஷ்யாவின் லூனா 25 ஒரு லேண்டர் மிஷன் மட்டுமே சுமந்து செல்கிறது, அதில் ரோவர் இல்லை. விக்ரம் லேண்டர் 1,745 கிலோ எடையும், லூனா 25 லேண்டர் 800 கிலோ எடையும் கொண்டது. விக்ரமின் எதிர்பார்க்கப்படும் பணிக்காலம் 14 நாட்கள் ஆகும், அதே சமயம் லூனா 25 ஒரு வருட காலம் ஆய்வு செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்திற்கு அருகே வெற்றிகரமான soft landing மைல்கல்லை அடைய ரஷ்ய மற்றும் இந்திய இலக்காக கொண்டுள்ளது.     

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget