Russia-Ukraine War: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவில் நுழையத்தடை
உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை பிரிட்டன் வழங்கி வரும் நிலையில் பிரதமர் போரிச் ஜான்சனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் நாடுகள் இடையேயான போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ரஷ்ய படைகள் வடக்கு உக்ரைன் பகுதிகளில் இருந்த நகரங்களை ஆக்கிரமித்தனர். குறிப்பாக கியூவ் நகரத்தை ரஷ்ய படைகள் ஆக்கிரமித்து இருந்தது. அந்த இடங்களிலிருந்து தற்போது ரஷ்ய படைகள் வெளியேறி இருந்தாலும் அவர்கள் ஏற்படுத்திய சேதம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவிற்குள் நுழைய அந்த நாடு தடை விதித்துள்ளது. உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை பிரிட்டன் வழங்கி வரும் நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
Russia bans entry to UK PM Boris Johnson and top officials over sanctions, reports AFP quoting Russian Foreign ministry
— ANI (@ANI) April 16, 2022
முன்னதாக, ரஷ்யாவில் படைகள் ஆக்கிரமிப்பு செய்திருந்தப் போது சில பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஒரு ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின் படி உக்ரைனின் புச்சா என்ற பகுதியில் ஒரு அடித்தளத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்களை ரஷ்ய படையினர் சிறை பிடித்து வைத்திருந்தாக கூறப்படுகிறது. அவர்கள் அங்கு 25 நாட்களுக்கும் மேலாக இருந்ததாக தெரிகிறது.
அந்த 20க்கும் மேற்பட்ட பெண்களில் தற்போது 9 பேர் கருவுற்றுள்ளதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. எனினும் இது தொடர்பான உறுதியான தகவல் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய படைகள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பிற முக்கியச் செய்திகள்:
#JUSTIN | 2024 மக்களவை தேர்தல் வியூகம்: சோனியா காந்தி-பிரசாந்த் கிஷோர் ஆலோசனை https://t.co/wupaoCQKa2 | #PrasanthKishor #SoniaGandhi #Congress pic.twitter.com/4ftsRe4Urm
— ABP Nadu (@abpnadu) April 16, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்