Ukraine - Russia crisis: ஃபெடரரை வீழ்த்திய உக்ரைன் டென்னிஸ் வீரர் இராணுவத்தில்... போர்க்களத்தில் கவனம் ஈர்த்த செர்ஜி..!
கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், சிறப்பாக விளையாடிய உக்ரைனிய வீரர் செர்ஜி, ஃபெடரரை வீழ்த்தி விம்பிள்டனில் இருந்து வெளியேற்றினார்.
ரஷ்யா - உக்ரைன் போரானது நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டே செல்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலால், உக்ரைனில் உள்ள மருத்துவமனை, குடியிருப்புகள் உள்ளிட்டவை உருகுலைந்து காணப்படுகின்றன. உக்ரைனை சுற்றி வளைத்திருக்கும் ரஷ்யா தற்போது தலைநகர் கீவை நெருங்கி இருக்கிறது. தலைநகரை சுற்றியுள்ள பல பகுதிகளில் தாக்குதல் கடுமையாக உள்ள நிலையில் அங்குள்ள மக்கள் பிற நாடுகளில் தஞ்சம் புகுந்து உள்ளனர். பலர் பதுகிடங்களில் பாதுக்காப்புக்காக தங்கியுள்ளனர்.
இந்நிலையில், சாமனியர்கள் பலர் உக்ரைன் இராணுவத்தில் இணைந்து நாட்டுக்காக போராடி வருகின்றனர். அந்த வரிசையில், பிரபல டென்னிஸ் வீரர் செர்ஜி ஸ்டக்கோவ்ஸி உக்ரைன் இராணுவத்தில் இணைந்து ரஷ்யாவை எதிர்த்து வருகிறார்.
கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், முன்னணி வீரர் ரோஜர் ஃபெடரருக்கு எதிராக விளையாடினார். அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய உக்ரைனிய வீரர் செர்ஜி, ஃபெடரரை வீழ்த்தி விம்பிள்டனில் இருந்து வெளியேற்றினார். அப்போது டென்னிஸ் உலகில் பெரிதும் கவனம் ஈர்த்த செர்ஜி, தொடர்ந்து விளையாடி வந்தார்.
Mañana hablamos en #DSF con @Stako_tennis
— 🎙 𝗗𝗮𝘃𝗶𝗱 𝗦𝗮́𝗻𝗰𝗵𝗲𝘇 (@David74Sanchez) March 16, 2022
De tenista profesional a estar en primera línea de combate !!! 🇺🇦
📝@RadioMARCA pic.twitter.com/M10BGFn9Fn
தற்போது 36 வயதாகும் அவர், சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 116-வது இடத்தில் உள்ளார். ஆனால், உக்ரைனில் ரஷ்யா தாக்குத்தல் நடத்தி வருவதால், இராணுவத்தில் சேர்ந்து சேவை செய்து வருகிறார் அவர். இது குறித்து பேசி இருக்கும் செர்ஜி, “துப்பாக்கியால் ஒருவரை சுடுவதை நான் எப்படி எடுத்து கொள்ளப்போகிறேன் என தெரியவில்லை. ஆனால், நான் களத்தில் இருக்க வேண்டுமென்பதை உணர்கிறேன். ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கிய முந்தைய நாள் துபாயில் இருந்தேன். டிவி சேனல்களைப் பார்த்து நாட்டின்மீது ரஷ்யா படையெடுப்பதை தெரிந்து கொண்டேன். உடனே நாடு திரும்பினேன், டென்னிஸ் ராக்கெட்டை எடுத்து வைத்துவிட்டு இராணுவ உடையை உடுத்திக் கொண்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்