Real Invisible Man : தலையைக் காணோம்! கூகுள் மேப்பில் தோன்றிய இன்விசிபிள் மனிதன்..! ஆச்சரியத்தில் பொதுமக்கள்.!
கூகுள் மேப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இன்விசிபிள் மனிதன் தோன்றியதால் பொதுமக்கள் ஆச்சரியத்தில் உறைந்தனர்.
புதிய இடங்கள் மற்றும் பகுதிகளை கண்டறிய கூகுள் மேப் பயன்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் கூகுள் மேப் மூலமாக படம்பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் மிகவும் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளின் பகுதியில் அந்த நாட்டின் கடற்படைக்கு சொந்தமான பகுதி அமைந்துள்ளது.
இந்த பகுதியை கூகுள் மேப் மூலமாக படம்பிடித்துள்ளனர். அந்த புகைப்படத்தில் ஹாலிவுட் திரைப்படங்களில் காட்டுவது போல தலை, கால், முகம் என உடலின் எந்த பாகமும் கண்ணுக்கு தெரியாதது போல ஒரு உருவம் நடந்து செல்கிறது. அந்த உருவம் வெள்ளை நிறத்தில் ஒரு ஆடை மட்டும் அணிந்துள்ளது.
தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படம் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். அமெரிக்காவின் கடற்படை பகுதியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு பகுதியில் ஏராளமான விசித்தரமாக ஆள் யாரென்று தெரியாத வகையில் ஒரு உருவம் படத்தில் காட்டுவது போல நடந்து செல்வது பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிவுட்டில்தான் உருவம் யாரென்றெ தெரியாத இன்விசிபிள் மனிதர்களை கொண்ட திரைப்படங்கள் காட்டப்படுவது வழக்கம். ஆனால், நிஜத்தில் இதுபோன்ற ஒரு உருவம் வெளியில் நடமாடி இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த புகைப்படத்தில் உள்ள உருவம் மரத்தில் ஏறுவது போன்ற பல புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படம் குறித்து வேறு எந்த தகவலும் தற்போது வெளியாகவில்லை. இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டதா? அல்லது உண்மையில் மர்மம் நிறைந்ததா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க : 40 வருடப் பழமை: கண்டுபிடித்த கூகுள் மேப்ஸ்! ஆச்சரியத்தில் சீனா!
மேலும் படிக்க : அடிமுதுகில் வளரும் முடி… உண்மையிலேயே ஒரு வால் பையன்.. ஆஞ்சநேயர் அவதாரம் என கிளம்பிய பரபரப்பு
மேலும் படிக்க : 25 நாட்கள் ரஷ்ய படைகளால் சிறைபிடித்து வைக்கப்பட்ட பெண்கள்.. கருவுற்ற 9 பெண்கள்.. குவியும் அதிர்ச்சி தகவல்கள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்