2 வரியில் ராஜினாமா கடிதம் கொடுத்த நபர்... காரணத்தை கேட்டு ட்ரெண்ட் செய்த நெட்டிசன்கள்
இந்தக் கடிதத்தை பெரும் தொழிலதிபர்களுள் ஒருவரான ஆர்பிஜி எண்டர்ப்ரைசஸ் குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோன்கா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இந்த சிறிய கடிதத்தில் ஆழமான செய்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வேலையில் சுவாரஸ்யம் எதுவும் இல்லாத காரணத்தால் தான் வேலையை விட்டு செல்ல விரும்புவதாக நபர் ஒருவர் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
வேலையை விட்டு செல்ல விரும்பிய அந்நபர் இரண்டே வரிகளில் எழுதிய இந்த ராஜினிமா கடிதம் ஜூன் 18ஆம் தேதி எழுதப்பட்டுள்ளது.
This letter is short but very deep. A serious problem that we all need to solve… pic.twitter.com/B35ig45Hhs
— Harsh Goenka (@hvgoenka) June 19, 2022
இந்நிலையில், இந்தக் கடிதத்தை முன்னதாக பெரும் தொழிலதிபர்களுள் ஒருவரான ஆர்பிஜி எண்டர்ப்ரைசஸ் குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோன்கா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இந்த சிறிய கடிதத்தில் ஆழமான செய்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், பணி இடங்களில் உள்ள ப்ரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இது நாம் தீர்வு காண வேண்டிய முக்கியப் பிரச்னை என்றும் தெரிவித்துள்ளார்.
Makes sense. No point in doing something if you are not enjoying.
— Prashanth Vemuganti (@prashanthpsi) June 19, 2022
Agree. Work environment is crucial. It's never a job; should be always a calling
— Francis Joseph (@Francis_Joseph) June 19, 2022
மேலும், பணியாளர் நேர்மையாக தன் காரணத்தை சொல்லி இருப்பதாக இந்தக் கடிதத்தை பல நெட்டிசன்களும் வரவேற்றுள்ள நிலையில், பணியாளரின் அணுகுமுறை பொறுப்பற்றும் முரட்டுத்தனமாகவும் உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Sir, The minimum this guy deserves is a personal exit interview. You don't get such honest and daring employee quite often, lot of people are accustomed to write "owing to personal reasons" but honesty is rare. @hvgoenka https://t.co/tEshyEvPQS
— Shruti Shree Tyagi (@TyagiShree) June 19, 2022