Queen Elizabeth Comics : காமிக்ஸ் புத்தகமாக வெளியானது “எலிசபெத்’ மகாராணியின் வாழ்க்கை.. ஒரு விறுவிறு தகவல்..
காமிக்ஸ் புத்தகத்தில் எலிசபெத்தின் பிறப்பு , அரசியல் , குடும்ப பிரச்சனைகள் , தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கை , ராணியின் வாழ்க்கையில் நடந்த பிரமாண்ட நிகழ்வுகள் ஆகியவை தொகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உலகின் நீண்ட நாள் ஆட்சி செய்த மகாராணி என்ற பெருமைக்குரிய ராணி எலிசபெத் கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு இந்தியா உட்பட அனைத்து நாட்டு தலைவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர். 70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்த இங்கிலாந்து ராணி எலிசபெத் காலமானதை அடுத்து மன்னர் சார்லஸ் அரசணையை ஏற்றுள்ளார்.
இந்த நிலையில் மகாராணி எலிசபெத்தின் வாழ்க்கை கதை காமிக்ஸ் புத்தகமாக வெளியாகியுள்ளது. 30 பக்கம் பளபளப்பான கிளாசிக் லுக்கில் உருவாகியுள்ள காமிக்ஸ் புத்தகத்தில் எலிசபெத்தின் பிறப்பு , அரசியல் , குடும்ப பிரச்சனைகள் , தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கை, ராணியின் வாழ்க்கையில் நடந்த பிரம்மாண்ட நிகழ்வுகள் ஆகியவை தொகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
View this post on Instagram
பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம் மிக்க முறைகளுள் ஒன்றான தேனீக்களை வளர்க்கும் , அரச குடும்பத்தின் ஊழியர் ஒருவர் ராணியின் மரணத்தை அறிவிப்பதில் இருந்து தொடங்குகிறது அந்த கதை. இது முற்றிலுமாக தனித்துவமாக வாழ்ந்து மறைந்த ராணிக்கு ‘அஞ்சலி ‘ செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த புத்தகத்தை காமிக்ஸ் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இது குறித்து பேசிய காமிக்ஸ் புத்தகத்தின் இணை எழுத்தாளர் மைக்கேல் ஃபிரிசெல் கூறும்பொழுது “அவரது 70 ஆண்டுகால ஆட்சியை சித்தரிக்க இது ஒரு பொருத்தமான வழி. நான் சிறியதாக ஆரம்பித்து அதாவது தேனீக்களின் புராணக்கதையில் ஆரமித்து உலகளவில் மில்லியன் கணக்கானவர்களால் பார்க்கப்பட்ட இறுதிச் சடங்கு என பிரம்மாண்டமாக முடிக்க விரும்பினேன் “ என தெரிவித்துள்ளார். எதிர்கால தலைமுறை மகாராணி குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த புத்தகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
கடந்த புதன்கிழமை "ட்ரிப்யூட் டு தி குயின் எலிசபெத் 2“ என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த புத்தகம் டிஜிட்டல் வடிவிலும் கிடைக்கிறது. அதோடு அட்டைகளுடன் கூடிய புத்தகமாகவும் கிடைக்கிறது.