Vladimir Putin: அமெரிக்க ஆயுதங்களை அழிக்கும் திறமை ரஷ்யாவிற்கு உண்டு - எச்சரிக்கை விடுத்த அதிபர் புதின்..!
Vladimir Putin : உக்ரைனின் பாதுகாப்பு படையின் வலிமையை மேம்படுத்துவதற்காக ரூ.1.8 பில்லியன் டாலர் ஆயுத உதவிகளை அமெரிக்க அறிவித்தது.
உக்ரைனுக்கு அமெரிக்கா ’Patriot air defence systems' ரக ஏவுகணைகளை வழங்கினால், அதை அழிக்கும் திறனும், ஆயுத பலமும் ரஷ்யாவிடம் இருப்பதாக அதிபர் விளாதிமிர் புதின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரஷ்யாவின் செய்தி ஊடகமான TASS- குறிப்பிட்டுள்ளதன்படி, அமெரிக்க அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கினாலும் அவற்றை முழுவதுமாக ரஷ்யா அழித்துவிடும் என்று புதின் தெரிவித்துள்ளார்.
முற்றிலும் அழிப்போம்:
கடந்த வாரம் உக்ரைனில் போர் தொடங்கிய பிறகு அந்நாட்டு அதிபர் வோலாதிமிர் செலன்ஸ்கி (Volodymyr Oleksandrovych Zelenskyy) அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். அப்போது உக்ரைனின் பாதுகாப்பு படையை பலப்படுத்துவதற்காக ’Patriot air defence systems ’ ரக் ஏவுகணைகள் வழங்கி ஆயுத உதவி அளிக்க உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக விளாதிமிர் புதின் நேர்காணல் ஒன்றில் கூறுகையில், “ Patriot ரக ஏவுகணைகள் உக்ரைனுக்கு அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது; அவற்றையெல்லாம் முற்றிலும் அழிப்போம். அமெரிக்கா இதற்கு மாற்றாக வேறேதும் ஒன்றை அனுப்ப வேண்டிய சூழல் ஏற்படும்; ஆனால், அது அவ்வளவு எளிதானது அல்ல. ” என்று கூறியிருந்தார்.
மேலும், உக்ரைன் இராணுத்தில் உள்ள ஆயுதங்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் ஆயுத உதவிகள் குறித்து கண்கானித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக அதிபர் மாளிகை (Kremlin website) வெளியிட்டிருந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஆயுத உதவி:
உக்ரைனின் பாதுகாப்பு படையின் வலிமையை மேம்படுத்துவதற்காக ரூ.1.8 பில்லியன் டாலர் ஆயுத உதவிகளை அமெரிக்க அறிவித்தது.
அதென்ன Patriot air Defence Systems?
பாட்ரியாட் ஏர் டிஃபன்ஸ் சிஸ்டம் ரக ஏவுகணைகள் தரையில் இருந்து வானில் பறந்து இலக்கை தாக்கும் திறன் கொண்டது. புதிய தொழில்நுட்பமான இதை அமெரிக்கா உட்பட 18 நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. 1980களில் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது. இதில் ரேடார் வசதி உண்டு. ஜென்ரேட்டர், கட்டுப்பாட்டு ஸ்டேடன், ஒரு டிரெக்கில் எட்டு ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கும். ஏர் மிசைல் ரகங்களில் இது மிகவும் திறன் வாய்ந்ததாக கருதப்படுகிறது. Raytheon நிறுவனம் இதுவரை 240 ’Patriot systems’ ரக ஏவுகணை லாஞ்சர்களை தயாரித்துள்ளது.
உக்ரைனுக்கு எப்படி உதவும்:
ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள உன்ரைனுக்கு இந்த ’Patriot air Defence Systems' சிறப்பாக உதவும். குறிப்பாக ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல்களை தகர்க்க இந்த புதிய தொழில்நுட்பம் உதவும். உக்ரைனுக்கு அதிகளவில் ஏவுகணைகள் தேவைப்படும் வேளையில் இந்த ‘Air Missile' போர் காலங்களில் உக்ரைன் சிறப்பாக செயல்பட உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ’Patriot air defence systems ' குறித்து புதின் கூறுகையில், அது ஏற்கனவே காலாவதியான ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த நிலையில், கிட்டத்தட்ட 10 மாதங்களாக போர் தொடர்ந்து வருகிறது. பெரும்பாலான நகரங்களில் இருந்து ரஷிய படைகள் திரும்பப்பெற்றுள்ளது. இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக புதின் ட்விஸ்ட் கொடுத்துள்ளார். உக்ரைனும் அமெரிக்காவும் ரஷியாவின் கவலைகளை புறக்கணித்துள்ளதாகவும் உக்ரைனை போர்க்களமாக பயன்படுத்தி ரஷியாவை பலவீனமாக்க முயற்சி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
முடிவுக்கு வருமா போர்..?
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவதே எங்கள் குறிக்கோள். இதற்காக நாங்கள் பாடுபடுகிறோம். அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வருவதை உறுதி செய்ய முயல்வோம். அதுவே, சிறந்தது. உக்ரைனில் போர் முடிவுக்கு வருமா? ரஷ்யா என்ன செய்ய போகிறது? போன்றவைகளுக்கு பதில் விரைவில் தெரியும்" என்றார்.