மேலும் அறிய

Priyanka Chopra : ரசிகர்களின் ராணி! புகழ்பெற்ற பிரிட்டிஷ் இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்ற முதல் இந்திய நடிகை!

Priyanka Chopra : பிரிட்டனின் புகழ்பெற்ற பத்திரிகையான வோக்- இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பெற்றார் பிரியங்கா சோப்ரா.

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, தன் தேர்ந்த நடிப்பு திறமையாலும், வித்தியாசமாக கதை தேர்வினாலும் பெரும்பாலன ரசிர்களின் ராணியாக திகழ்கிறார். திரைத்துறையில் தனக்கான இடத்தை தக்கவைத்துகொண்ட தன்னிகரில்லா நடிகை. இவர் ஹாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இப்போது, பிரிட்டிஷ் பத்திரிகையாக வோக் (Vogue) இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமைக்குச் சொந்தக்காரரும் இவரே. 

View this post on Instagram
 
A post shared by British Vogue (@britishvogue)

வோக் இதழின் பிப்ரவரி மாத இதழில் இவரது பேட்டியும் வெளிவந்திருக்கிறது.

பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் திரைப்படங்கள்: 

ஹாலிவுட் சினிமாவில் இடஸ் ஆல் கம்மிங் பேக் டூ மீ (It`s All Coming Back To Me`) என்ற திரைப்படமும், `Citadel` வெப் சீரிஸ் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.

நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் திரையுலகில் கால்பதித்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், பிரபல சேனலின் நேர்காணலில் இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார். ‌ பத்து வருட கடின உழைப்புக்கு பின் தற்போது அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அவருக்கு கிட்டி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நான் ஹாலிவுட்டில் தடம் பதித்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது தான் நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தேனோ அதை செய்கிறேன். பிரியங்கா சோப்ரா பிரபல சீரிஸ் குவான்டிகோ சீரிஸில் நடித்து இருந்தார். மேலும் பேவாட்ச்சில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார். 

தென்னிந்திய நடிகைகள் ஹாலிவுட் வாய்ப்புக்காக மிகவும் போராட வேண்டி உள்ளது. பெரிய கமர்சியல் படங்களில் முன்னணி கதாபாத்திரத்திற்காக நாம் நிறைய உழைப்பு போட வேண்டி இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் தான் எப்போதுமே ஒரு குறிக்கோளை நோக்கி பயணம் செய்யும் ஒரு பெண்மணி என்று குறிப்பிட்டுள்ளார்.  இந்தியாவில் நிறைய பெரிய ஆளுமைகளுடன் எல்லாம் நான் நடித்துவிட்டேன். அதேபோல் ஹாலிவுட்டிலும் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறியிருந்தார். இப்போது, அவரின் கனவு நிறைவேறிவிட்டது.

மனம் திறந்த பிரியங்கா:

பிரியங்கா சோப்ரா பாலிவுட்டின் அசைக்க முடியாத நடிகைகளுள் ஒருவரானார். அதன் பின்னர் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்காவிலேயே முகாமிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா , பிரபல நடிகரும் , பாப் இசை பாடகருமான நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.பிரியங்கா சோப்ரா தனது திரைப்பயணத்தின் தொடக்கத்தில், எவ்வளவு மோசமாக நடத்தப்பட்டார் என்பது குறித்து மனம் திறந்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில், நடிகை பிரியங்கா சோப்ரா தனது ஆரம்பகால கசந்த திரை அனுபவங்கள் குறித்து பேசி உள்ளார். அப்போது அவர்  பாலிவுட்டில் கதாநாயகிகளுக்கு கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் கொடுக்கப்படவில்லை என்பது குறித்தும், ஆண்கள் படப்பிடிப்பு தளங்களில் சிறப்பு மரியாதை பெறுவதும் பெண்களுக்கு அவை அளிக்கப்படாமல் இருந்தது குறித்தும் சாட்டியுள்ளார். அது குறித்து அவர் பேசுகையில், பாலிவுட்டில் கதாநாயகர்களுக்கு இணையாக என்றுமே சம்பளம் எனக்கு கொடுக்கப்பட்டது இல்லை. எனது இணை கதாநாயகனின் 10 சதவீத சம்பளம் தான் எனக்கு கிடைத்தது. என் சம்பளத்திற்கும் அவர்களின் சம்பளத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்பது மிகப் பெரிதாக இருந்தது. பல பெண்கள் இன்றும் அந்த நிலையை சந்தித்து வருகின்றனர்.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Embed widget