மேலும் அறிய

Pope Francis Surgery: போப் ஆண்டவருக்கு வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை.. இப்போது எப்படி இருக்கிறார்?

போப் ஆண்டவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் தலைவரான போப் ஆண்டவருக்கு நேற்று குடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், இன்னும் ஒரு சில தினங்கள் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். மார்ச் மாதம் அவருக்கு சுவாச தொற்று நோய் ஏற்பட்டது. தற்போது அவருக்கு குடலில் பிரச்சனை  ஏற்பட்டதால் ரோமில் இருக்கும் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனையின்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறுவுரை வழங்கியதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில், செயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி லேபரோடமி மற்றும் abdominal wall reconstruction மேற்கொள்ளப்பட்டது.  

போப் ஆண்டவருக்கு நடந்த அறுவை சிகிச்சை தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், “அவருக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. வேறு எந்த நோய்த்தொற்றும் இல்லை. ஒரு சில நாட்கள் ஓய்வுக்கு பின் அவர் வீடு திரும்புவார்” என தெரிவித்தனர்.  "போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதையடுத்து பலரும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். அனைவரின் பிரார்த்தனைக்கு நன்றிகள்" என வாட்டிகன் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் இருந்தாலும் ஒரு சில அவசர விஷயங்களில் உடனே முடிவெடுக்க வேண்டுமென்றால், அவர் ஜெமெல்லி மருத்துவமனையிலிருந்தே முடிவெடுப்பார் என வாட்டிகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது சந்திப்புகள் அனைத்தும் 18-ந் தேதி வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் 3 முறை போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்ச் மாதம் அவர் சுவாச பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போப் பிரான்சிஸ் அர்ஜென்டினாவில் பாதிரியாராக பயிற்சி மேற்கொண்ட போது நுரையீரல் தொற்று காரணமாக ஒரு பகுதி நுரையீரல் அகற்றப்பட்டதையடுத்து அவருக்கு அவ்வப்போது சுவாச பிரச்சனை ஏற்படும் என மருத்துவர்கள் தரப்பில்  தெரிவிக்கப்பட்டது.  போப் பிரான்சிஸ்ஸிற்கு ஏற்கனவே பெருங்குடல் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. முழங்காலில் நாள்பட்ட வலியின் காரணமாக அவர் சக்கர நாற்காலி அல்லது வாக்கிங் ஸ்டிக்கை பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.         

Jan Shatabdi Express: நள்ளிரவில் தடம்புரண்ட ஜன் சதாப்தி ரயில்.. தொடரும் சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி

Miss World 2023 : 27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் நடைபெறவிருக்கும் உலக அழகி 2023 போட்டி... முழு விவரம்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்...
Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்...
One Day College Student: ஒரு நாள் கல்லூரி மாணவியராக மாறிய மகளிர்... சேலத்தில் பெண்கள் நெகிழ்ச்சி.
One Day College Student: ஒரு நாள் கல்லூரி மாணவியராக மாறிய மகளிர்... சேலத்தில் பெண்கள் நெகிழ்ச்சி.
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
Embed widget