Shinzo Abe: முன்னாள் பிரதமரை சுட்ட நபரை துரத்திப் பிடித்த ஜப்பான் போலீஸ்!
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேவை சுட்ட நபரை ஜப்பான் போலீசார் துரத்திச் சென்று விரட்டிப் பிடித்தனர்.
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேவை சுட்ட நபரை ஜப்பான் போலீசார் துரத்திச் சென்று விரட்டிப் பிடித்தனர்.அவர் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை செய்ய முயற்சி செய்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
நாரா (Nara) நகரில் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த ஷின்ஸோ அபேவை பின்னால் இருந்து மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அந்த நபர் தப்பி ஓட முயன்றபோது, போலீசார் அவரை துரத்திச் சென்று சுற்று வளைத்து பிடித்தனர்.
#BREAKING #UPDATE Former Japanese prime minister Shinzo Abe is feared dead after apparently being shot at a campaign event, local media report.
— Sumit Kumar (@SumitLegal) July 8, 2022
National broadcaster NHK says a man has been arrested for attempted murder and a gun confiscated. #ShinzoAbe pic.twitter.com/FEIoK2ZZ7I
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேவை (Shinzo Abe) மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். நெஞ்சில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டுடன் அவர் உடனடியாக மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறிது ஜப்பான் போலீஸ் கூறுகையில், துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டது.உடனடியாக அவருக்கு இரத்தம் வந்ததையெடுத்து அபேவிற்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு மருத்துவமைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றார்.
#UPDATE Former Japanese prime minister Shinzo Abe is feared dead after apparently being shot at a campaign event, local media report.
— Ramlal (@Ramlal217) July 8, 2022
National broadcaster NHK says a man has been arrested for attempted murder and a gun confiscated
AFP https://t.co/ZViDei6Wav
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்