Watch Video : சாப்பிடும்போது மூச்சுத்திணறல்.. மயக்கம்.. முதலுதவி செய்து காப்பாற்றிய வெயிட்டரும், போலீஸும்..
பிரேசில் நாட்டில் உள்ள சாப்பிட்டுக்கொண்டிருந்த நபர் மூச்சுத்திணறலால் மயங்கிய போது வெயிட்டரும், போலீஸ் அதிகாரி ஒருவரும் இணைந்து காப்பாற்றிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பிரேசில் நாட்டில் மிகவும் பிரபலமான நகரங்களில் ஒன்று சா பாலோ. அந்த நகரத்தில் உள்ள உணவு விடுதியில் நேற்று 38 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாப்பிட வந்தார். சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த மேசையின் மீதே மயங்கி விழுந்தார்.
சாப்பிட்டுக்கொண்டிருந்தவர் திடீரென மேசையின் மீது மயங்கி விழுந்ததை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, அந்த உணவு விடுதியில் பணியாற்றும் வெயிட்டர் உடனடியாக ஓடி வந்து அவருக்கு முதலுதவி செய்தார்.
A waiter and a highway police officer saved the life of a 38-year old man who passed out after choking on his food at a restaurant in São Paulo, Brazil last Friday.
— GoodNewsCorrespondent (@GoodNewsCorres1) December 2, 2021
pic.twitter.com/LlHa3uwrE9
பின்னர், உடனடியாக அந்த நகரத்தின் போலீசாரும் அவருக்கு முதலுதவி அளித்தார். இருவரும் மாறி, மாறி அளித்த முதலுதவி காரணத்தால் மயங்கிய அந்த நபர் சட்டென்று கண்விழித்தார். பின்னர், அவரை அங்கு அமரவைத்து தண்ணீர் அளித்து அருகில் இருந்த நபர்கள் ஆசுவாசப்படுத்தினர்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. இந்த காட்சிகளை குட்நியூஸ் கரெஸ்பாண்டன்ட் என்ற டுவிட்டர்வாசி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்