Pakistan umpire: இப்போ நான் கிரிக்கெட் நடுவர் அல்ல.. துணிக்கடை ஓனர்! ஆசாத் சொல்லும் பிஸினஸ் கதை!
பாகிஸ்தான் கிரிக்கெட் நடுவர் ஆசாத் ரெளவ் ஆடைகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
கிரிக்கெட் போட்டிகளில் கள நடுவராக இருந்தவர் தற்போது கடை ஒன்றிற்கு உரிமையாளராக இருக்கிறார். பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசாத் ரெளவ் (Asad Rauf) லாண்டா பஜார் பகுதியில் கடை ஒன்றை அமைத்து நடத்தி வருகிறார். இவர் 2013 ஆண்டு வரை 170 சர்வதேச போட்டிகளில் நடுவராக இருந்துள்ளார். தற்போது, கிரிக்கெட் மீதிருந்த ஆர்வம் குறைந்து சொந்தமாக ஆடை மற்றும் ஷூ விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
Ex Test Umpire Asad Rauf Open Shop in Landa Bazar ... Shrugs off @virendersehwag Bribery claims ... He quit umpiring due to his son critical health condition...#asadrauf#umpire #icc @humnewspakistan @humnews_urdu pic.twitter.com/ZILx6MinMk
— Usman Khan (@usmann_khann) June 23, 2022
இவருக்கு கடந்த 2016 ஆண்டு ஊழல் குற்றத்தில் சிக்கியதால் போட்டிகளில் பங்கேற்க பி.சி.சி.ஐ. தடை விதித்தது. 2013 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் மேட்ச்-ஃபிக்ஸிங் முறைகேடிலும் இவர் பெயர் இடம்பெற்றது. மேலும், இவர் மீது பாலியல் புகார்களும் எழுந்தது. இப்படி பல்வேறு காரணங்களால் இவர் நடுவராக செயல்பட தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், அதோடு எல்லாம் முடிந்துவிட்டது என்றில்லாமல், தனக்கு பிடித்தவற்றை செய்து வருகிறார்.
தன்மீதான குற்றச்சாட்டுகள் பற்றி கூறும் இவர், தனக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், இந்திய கிரிக்கெட் வாரியம் அவர்களாகவே இந்த விஷயத்தில் முடிவெடுத்ததாகவும் கூறுகிறார்.
ஆசாத் ரெளவ் பாகிஸ்தான் நாட்டின் ஒரு தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், நான் என் துறையில் பலகாலம் பணியாற்றிவிட்டேன். இனி பார்ப்படதற்கு ஏதுமில்லை.” என்றார்.
மேலும், அவர் கூறுகையில், “ நான் தேர்ந்தெடுக்கும் துறையில் திறன்மிக்கவனாக வேண்டும் என்று நினைப்பேன். என் தொழிலில் நான் முதன்மையானவனாக இருக்கவே விருப்பம். நான் கிரிக்கெட் விளையாடினேன்’ அதில் சிறப்பாக பங்காற்றினேன். கிரிக்கெட் போட்டிகளுக்கு நடுவரானேன்’ அதிலும் வெற்றி பெற்றேன். எந்த துறையாக இருந்தாலும் அதில் என் தனித்தன்மையை வெளிப்படுத்துவதை நோக்கமாக கொண்வன் நான். ” என்றார்.
இவருடைய மாற்றுத்திறனாளி மகனுக்காக புதிதாக தொழில் தொடங்கியதாகவும், அவருடைய மகன் வெளிநாட்டில் படித்துவிட்டு நாடு திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்