Pakistan FM: “இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார், ஆனா..“; பாக். வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன.?
இந்தியா உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர் கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில், அவர் மற்றொரு விஷயத்தையும் கூறியுள்ளார். அது என்ன என்பதை பார்க்கலாம்.

இந்தியா-பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்திலுந்தாலும், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளதால், தண்ணீருக்கா தவிக்கும் பாகிஸ்தான், இந்தியா உடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஏற்கனவே கூறி வருகிறது. இந்நிலையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மீண்டும் கூறியுள்ளார்.
“காஷ்மீர் விவகாரம் உள்பட அனைத்தையும் பேசத் தயார்“
பாகிஸ்தானில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தர், காஷ்மீர் விவகாரம் உள்பட, நிலுவையில் உள்ள அனைத்து பிரச்னைகள் குறித்தும் கண்ணியமான முறையில் பேசத் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். அதே நேரத்தில், பேச்சுவார்த்தைக்காக கெஞ்ச மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே, 2003-ம் ஆண்டில், அப்போதைய ஆட்சியாளர் ஜெனரல் பர்வேஷ் முஷாரஃப் காலத்தில் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான அனைத்து சர்ச்சைக்குரிய பிரச்னைகளையும் உள்ளடக்கிய 8 கூறுகளை கொண்டிருந்தது. 2008 மும்பை தாக்குதலுக்குப் பின், இந்த பேச்சுவார்த்தை தடம் புரண்டது. அதன் பின்னர் பழைய நிலைக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை.
“இந்தியா தாக்கினால் பாகிஸ்தானும் முழு பலத்துடன் தாக்கும்“
இந்தியா உடனான மோதலில் பாகிஸ்தான் படைகள் வான்வழி மற்றும் நிலத்தில் தங்கள் வலிமையை நிரூபித்ததாகவும், எந்த ஒரு ஆத்திரமூட்டலுக்கும் முழுமையான பதிலடி கொடுக்கும் என்றும் பாகிஸ்தான் துணைப் பிரதமர் எச்சரித்தார்.
மேலும், கடல் வழியாகவோ அல்லது வேறு வழியிலோ தாக்குதல் நடத்தினார், இந்தியாவுக்கு முழு பலத்துடன் பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.
பாக். துணைப் பிரதமர் ஏன் அவ்வாறு கூறினார்.?
காஷ்மீரின் பஹல்காமில், சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, 26 பேரை கொன்ற தீவிரவாதிகள், பாகிஸ்தான் ஆதரவு பெற்றவர்கள் என்று தெரியவந்ததையடுத்து, பாகிஸ்தானுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத நிலைகளை, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி அழித்தது இந்தியா.
இதைத் தொடர்ந்து, இந்திய எல்லைகளில் உள்ள கிராமங்களை குறித்து வைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்தியா முறியடித்தது. எனினும் சில நாட்கள் மோதல் நீடித்த நிலையில், இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் கெஞ்சியதால், மோதல் முடிவுக்கு வந்தது.
ஆனால், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் நிறைவடையவில்லை என்றும், தேவைப்பட்டால் எந்த நேரமும் தாக்குதல் நடத்த இந்திய படைகள் தயாராகவே இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
இதனாலேயே, அப்படி ஏதாவது தாக்குதலை இந்தியா நடத்தும் பட்சத்தில், அதற்கு முழு பலத்துடன் பதிலடி தரப்படும் என பாகிஸ்தான் துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.
Before You Go
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















