Pakistan Floods: 900 பேரை பலி வாங்கிய பாகிஸ்தான் வெள்ளம்.. அமைச்சர் சொன்ன ஷாக் ரிப்போர்ட்!
பாகிஸ்தானில் இந்த கோடையில் ஏற்பட்ட கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து 326 குழந்தைகள் உள்பட குறைந்தது 903 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் இந்த கோடையில் ஏற்பட்ட கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து 326 குழந்தைகள் உள்பட குறைந்தது 903 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு காலநிலை மாற்ற அமைச்சர் ஷெர்ரி ரகுமான் அதிர்ச்சிகர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான பருவமழையால் பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 900 மனித உயிர்கள் மற்றும் 10 லட்சம் கால்நடைகள் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்களை இந்த கனமழை மற்றும் வெள்ளம் சேதப்படுத்தியுள்ளது.
More than 600 people dead & 1 million affected due to flash floods in Pakistan. It is the worst flood in more than 30 years. Region received 305% more rain than the average. Expect worse floodings in upcoming years. This is climate crisis. Did global media told you about this? pic.twitter.com/sLfoRJ0Lhv
— Licypriya Kangujam (@LicypriyaK) August 22, 2022
2010ல் மழையினால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகளை விட இந்த ஆண்டு திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட அழிவுகள் மிக அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தென்மேற்கு பலுசிஸ்தான், சிந்து, தெற்கு பஞ்சாப் மற்றும் வடக்குப் பகுதிகள் ஆயிரக்கணக்கான மக்கள் உண்ண உணவு மற்றும் தங்குமிடம் இல்லாமல் தவித்து வருவதாகவும் தெரிகிறது.
Torrential rains unprecedented in Sindh right now,Balochistan, DG Khan also at risk. No question of the provinces or Islamabad being able to cope with this magnitude of climate catastrophe on their own.Lives r at risk,thousands homeless. Int’l partners need to mobilise assistance pic.twitter.com/ZgDl7QGMOW
— SenatorSherryRehman (@sherryrehman) August 23, 2022
காலநிலை மாற்றத்திற்கான அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான், "ஜூன் முதல், 326 குழந்தைகள் மற்றும் 191 பெண்கள் உட்பட 903 பேர் பல்வேறு பருவமழை மற்றும் வெள்ளத்தில் இறந்துள்ளனர். இறப்புகள் தவிர, 1,300 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ”நிதியுதவி மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை புனரமைப்பு முயற்சிகள் பணமில்லா பாகிஸ்தானுக்கு ஒரு சவாலாக இருக்கிறது. முடிந்தவரை செலவினங்களைக் குறைக்க வேண்டும். இது பிரிவினைக்கான நேரம் அல்ல, ஒற்றுமைக்கான நேரம். நாம் அனைவரும் ஒன்றினைந்து இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க வேண்டும். அனைவரும் ஒன்றுபட்டு நின்று வெல்வோம்.
இந்த காலநிலை பேரழிவின் அளவை மாகாணங்கள் அல்லது இஸ்லாமாபாத் தாங்களாகவே சமாளிக்க முடியும் என்பதில் எந்த கேள்வியும் இல்லை. இருப்பினும் பல உயிர்கள் ஆபத்தில் உள்ளது. ஆயிரக்கணக்கான வீடற்றவர்களாக உள்ளனர். இதை சரிசெய்ய சர்வதேச நாடுகளிடம் இருந்து உதவியை பெற வேண்டும்” என்றும் தெரிவித்தார்.