மேலும் அறிய
Advertisement
சந்தர்ப்பவாத இனவாதிகள்... ஆளும் தரப்பை குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
இனவாதத்தை தூண்டி நடத்தப்பட்ட பிரச்சாரத்தின் மூலம் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்துவதற்கு ஒரு தரப்பினர் செயல்பட்டதாக சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
சந்தர்ப்பவாத இனவாதிகள் என ஆளும் தரப்பை குற்றஞ்சாட்டிய எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
இலங்கையில் இனவாதத்தை தூண்டி, சந்தர்ப்பவாத அரசியல் நடத்தி ஆட்சியைப் பிடித்ததாக கோத்தபய ராஜபக்ஷ அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
இனவாதத்தை தூண்டி முன்னெடுக்கப்பட்ட அரசியலால் இன்று பல்வேறு நாடுகளின் உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இனவாதத்தை முன்வைத்து சமூகத்தினுல் தவறான புரிதலை ஏற்படுத்தி எதிராக செயல்பட்டதாக சஜித் பிரேமதாச கண்டித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளோடு இலங்கை உண்மையான முறையில் உறவுகளைப் பேணவில்லை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
முன்னதாக, வீடமைப்பு மற்றும் கட்டுமான துறை அமைச்சராக தான் செயல்பட்ட போது, கட்டார் நிறுவனம் ஒன்றின் கிளை ஒன்றை இலங்கையில் திறப்பதற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கிறார்.அந்த அழைப்பினை ஏற்று கட்டார் நிறுவனத்தின் கிளை திறப்பு விழாவில் தான் கலந்து கொண்டதாகவும் அதன் பின்னர் தன் மீது இனவாத விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையின் வளர்ச்சியில் மத்திய கிழக்கு நாடுகளின் உதவி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது.இனவாதத்தை தூண்டி நடத்தப்பட்ட பிரச்சாரத்தின் மூலம் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்துவதற்கு ஒரு தரப்பினர் செயல்பட்டதாக சஜித் பிரேமதாச குற்றஞாசாட்டி இருக்கிறார்.
இவ்வாறான இலங்கை அரசியல்வாதிகளின் குறுகிய இனவாத போக்கை கண்டு கொண்ட கட்டார் போன்ற மத்திய கிழக்கு நாடுகள் பல்வேறு முக்கிய திட்டங்களில் இருந்து பின்வாங்க தொடங்கின.2019 காலகட்டங்களில் மத்திய கிழக்கில் உள்ள சில முஸ்லிம் அமைப்புகள் ,நாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய குழுவினர், இன்று அந்த நாட்டிற்கே எரிபொருள் தாருங்கள் என கேட்டு சென்றிருப்பதாக சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டி உள்ளார்.இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ,எரிபொருள் தட்டுப்பாடு என்பது மிகவும் கவலைக்கிடமாற நிலையில் இருக்கிறது .
இந்நிலையில் இலங்கைக்கு மத்திய கிழக்கு நாடுகள் தான் எரிபொருட்களை வழங்கி வந்தன.இடையில் ஏற்பட்ட விரிசல்களின் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையின் உறவிலிருந்து பின் வாங்க தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு காலத்தில் மோசமான நிலையில் இருந்த கட்டார் போன்ற நாடுகள் இன்று எவ்வாறு முன்னேற்றமடைந்து இருக்கின்றன என்பதை இலங்கை அரசியல்வாதிகள் பார்க்க வேண்டுமென சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கிறார்.
இனவாதத்தையே முழு நேர தொழிலாக கொண்ட, உழைப்பாக பயன்படுத்தும் குழுக்கள் இந்த நாட்டில் இருக்கும் வரை நாடு முன்னேறாது எனவும் ,நாட்டுக்கு உலக நாடுகளிடையே பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் எனவும் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார்.குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் தற்போதைய கோத்தபாய ராஜபக்ஷ அரசால் மேற்கொள்ளப்பட்ட இனவாத பிரச்சாரத்தால் தற்போது நாடு பெரும் இழப்பை சந்தித்து இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
இலங்கையின் தற்போதைய அரசுடன் ,பல உலக நாடுகள் வெறுப்புத் தன்மையை காட்ட காரணம் ,இனவாதம் ,இனவெறியே என சஜித் பிரேமதாசா சுட்டிக்காட்டி இருக்கிறார்.நாட்டை கட்டி எழுப்புவதற்கு மிக முக்கியமாக ,இலங்கைக்கு உதவிய நாடுகளோடு சுமூக உறவை பேணி வந்திருந்தால் இன்று இலங்கைக்கு இந்த நிலை வந்திருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.இனிமேலாவது இலங்கையின் முன்னேற்றத்திற்கான பொருளாதார மாறுபாடுகளை செய்வதற்கு உரிய முறையில் நட்பு நாடுகளிடம் உறவுகளை பேண வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை எப்போதுமே சர்வதேச நாடுகளோடு முரண்பட்ட நிலைமையை தான் கடைப்பிடித்து செல்கிறது என சுட்டிக்காட்டி உள்ள சஜித் பிரேமதாச,இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகளோடு உறவுகளை பேணிப் பாதுகாத்துச் செல்ல அரசியல்வாதிகளுக்கு தெரிய வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.இல்லையென்றால் இலங்கைக்கு இவ்வாறான ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருக்காது எனவும், இலங்கைக்கு ஒரு பிரச்சனை என்றால் அயல்நாடுகள், நட்பு நாடுகள் பிரச்சனையான சமயத்தில் கரம் கொடுத்து உதவி செய்திருக்கும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion