குறைந்த அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் துர்க்மெனிஸ்தான்
குறைந்த அளவிலான சுற்றுலாப்பயணிகள் மட்டுமே வந்து செல்லும் துர்க்மெனிஸ்தானின் துயரத்தை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
சுற்றுலாத்துறை என்பது ஒரு நாட்டின் வளமையை பிரதிபலிக்கும் அதே நேரத்தில் அந்நாட்டின் பொருளாதாரத்திலும் பெரிய பங்கினை வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நாட்டிலும் பிற மாநிலங்கள் மாற்று பிற நாடுகளில் இருந்து சுற்றுலாப்பயணிகளை மட்டுமே நம்பி வாழும் மக்கள் அதிக அளவில் உள்ளனர் என்றால் அதுமிகையல்ல. இந்த கொரோனா காலகட்டத்தில் சுற்றுலாத்துறை பல நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுஒருபுரம் இருக்க, உலகில் உள்ள சில நாடுகள் இயற்கை எழில்கொஞ்சும் பல அம்சங்களை தன்னகத்தே கொண்டிருந்தும். சுற்றுலா பயணிகளை பெரிய அளவில் ஈர்ப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை. அந்த வரிசையில் மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான துர்க்மெனிஸ்தான் வருடத்திற்கு 500 முதல் 10,000 வரையிலான சுற்றுலா பயணிகளை மட்டுமே பெற்றுவருகிறது என்பது ஆச்சர்யம் அளிக்கும் உண்மை. மிகக்குறைந்த சுற்றுலாப்பயணிகளை பெரும் நாடுகளில் இதும் ஒன்று.
காஸ்பியன் கடல் பகுதியின் எல்லையில், பெரும்பாலான அளவு பாலைவனத்தால் கவரப்பட்டுள்ள அழகிய நாடு தான் துர்க்மெனிஸ்தான். குறிப்பிட்ட அளவிலான நிலப்பரப்பில் ஆயிரத்திற்கும் அதிகமான சலவைக்கல் கட்டிடங்களை கொண்ட நாடு, என்ற கின்னஸ் சாதனையை இந்த நாடு பெற்றுள்ளது. அங்குள்ள கட்டிடங்கள் ஒன்றில் தங்கத்தாலான இந்நாட்டின் வரைபடம் உள்ளது.
அழகிய பாலைவனங்கள், உயரமான கட்டிடங்கள், வியக்கவைக்கும் கட்டுமானங்கள் என்று பல இருந்தும் உள்நாட்டில் நிலவும் பிரச்சனையாலும், சுற்றிப்பார்க்க அதிக அளவில் செலவாகும் என்பதாலும் இங்கு சுற்றுலா பயணிகள் வர தயங்குகின்றனர். சர்வாதிகார ஆட்சி நிலவும் இந்த நாட்டில் வாழும் 92 சதவிகித மக்கள் அரசு நிறுவனத்தில் தான பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.