Venus - Jupiter Conjunction: பூமிக்கு மிக அருகில் வரும் வெள்ளி - வியாழன் கோள்கள்..! எப்போது? எப்படி பார்ப்பது?
மார்ச் 1ம் தேதி வீனஸ் மற்றும் வியாழன் கோள் மேற்கு வானத்தில் ஒன்றாக பூமிக்கு மிக அருகில் தோன்றும் அரிய வானியல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
![Venus - Jupiter Conjunction: பூமிக்கு மிக அருகில் வரும் வெள்ளி - வியாழன் கோள்கள்..! எப்போது? எப்படி பார்ப்பது? On March 1, a rare astronomical event will take place when Venus and Jupiter will appear very close to Earth together in the western sky. Venus - Jupiter Conjunction: பூமிக்கு மிக அருகில் வரும் வெள்ளி - வியாழன் கோள்கள்..! எப்போது? எப்படி பார்ப்பது?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/24/4196d057f7b401b339915e92c8b92d1e1677223079466589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மார்ச் 1ம் தேதி வீனஸ் மற்றும் வியாழன் கோள் மேற்கு வானத்தில் ஒன்றாக பூமிக்கு மிக அருகில் தோன்றும் அரிய வானியல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
நெருங்கும் வீனஸ் - வியாழன்:
வானவியல் நிகழ்வுகளில் அவ்வபோது சூரிய குடும்பத்தின் கோள்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் அதிசய நிகழ்வுகள் நடைபெறும். கடந்த ஆண்டில் செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்தித்த அரிய நிகழ்வு நடந்தது.
அதேபோல் வானத்தில் பிரகாசமான கிரகங்களான வெள்ளி மற்றும் வியாழன், இந்த மாதம் முழுவதும், ஒவ்வொரு நாளும் ஒன்றையொன்று நெருங்கி வருகின்றன. பிப்ரவரி முழுவதும், இந்த இரண்டு நட்சத்திரங்களும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மேற்கு வானத்தில் பிரகாசமாக பிரகாசிக்கிறது. மார்ச் 1, 2023 அன்று ஒரு அரிய வானியல் நிகழ்வு நடக்க உள்ளது.
எப்போது?
வெள்ளி மற்றும் வியாழன் கிரகங்கள் வானத்தில் மிகவும் நெருக்கமாக தோன்றும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நாளில், வீனஸ் மற்றும் வியாழன் சூரிய அஸ்தமனத்திற்கு 1.5 மணி நேரம் வானத்தின் ஒரே பகுதியில் தோன்றும், இந்த நிகழ்வை conjunction என அழைக்கப்படும். வீனஸ் இந்திய நேரப்படி இரவு 8:40 மணிக்கு மறையும், வியாழன் இரவு 8:38 மணிக்கு இந்திய நேரப்படி மறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வது எப்படி?
நாசாவின் கூற்றுப்படி, conjunction என்பது இரண்டு கிரகங்கள், ஒரு கிரகம் மற்றும் சந்திரன், அல்லது ஒரு கிரகம் மற்றும் நட்சத்திரம் பூமியின் வானில் நெருக்கமாகத் தோன்றும். இது அவ்வப்போது நிகழும். கிரகங்கள் சூரியனை சுற்றி வரும் பாதையில் நேர்கோட்டில் வரும்போது இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
ரோவன் பல்கலைக்கழகத்தில் உள்ள எடெல்மேன் கோளரங்கத்தின் படி, மார்ச் 1 ஆம் தேதி நடைபெறும் கிரகங்களின் இணைப்பு வீனஸ் மற்றும் வியாழன் 32 ஆர்க்மினிட்கள் இருக்கும். ஒரு ஆர்க்மினிட் ஒரு டிகிரியின் 1/60 க்கு சமம், அதாவது 32 ஆர்க்மினிட்கள் கிட்டத்தட்ட அரை டிகிரிக்கு சமம். இது முழு நிலவின் அகலத்திற்குச் சம2மாகும். பொதுவாக தொலைநோக்கி பயன்படுத்தி இது போன்ற அரிய நிகழ்வை காணலாம். வீன்ஸ் மற்றும் வியாழன் மார்ச் 1ஆம் தேதி மிக நெருக்கமாக வானில் இரண்டு புள்ளிகளாகத் தோன்றும். சூரிய அஸ்தமனத்திற்கு மேற்கு வானத்தில் இந்த கிரகங்களை பார்க்க முடியும், மேலும் இந்த காட்சியைக் காண தொலைநோக்கியோ தேவையில்லை என கூறுகின்றனர்.
பிரகாசம்:
வெள்ளி மற்றும் வியாழன் இரண்டும் மிகவும் பிரகாசமாக தெரியும் கிரங்களாகும். வெள்ளி பூமியிலிருந்து மிகவும் அருகில் இருப்பதாலும், சூரிய ஒளியை உள்வாங்கி அதிகமாக வெளியிடுவதாலும் பிரகாசமாக தெரியும். வியாழன் பூமியை விட 11 மடங்கு பெரிய கோள் என்பதால் பிரகாசமாக தெரியும்.
நேற்று மாலை நிலவுக்கு நேர்கீழே வியாழன் மற்றும் வெள்ளி ஒரே நேர்கோட்டில் காட்சி அளித்தன.இந்த அதிசய வானியல் நிகழ்வை மக்கள் பலர் கண்டு வியந்துள்ளனர். அதை பலரும் படம் பிடித்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். இன்று ஒரே நேர்கோட்டில் வியாழன், வெள்ளி கிரகங்களை காணலாம் என்றாலும் நிலவு அதன் நேர்கோட்டில் சந்திக்குமா என்பது தெரியவில்லை. சூரிய குடும்பத்தில் உள்ள 9 கோள்களும் அதனதன் வெவ்வேறு நீளமுள்ள வட்டப்பாதைகளில் சுற்றி வரும் நிலையில் மிக அரிதாக இதுபோல ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் வானியல் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)